பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 599

ஏதொன்றிலேனும் நிலைத்து வாழ்க்கைத் துணைநலம் பெறுவதே மனையற மென்னப்படும். தொல்காப்பியப் பொருளதிகாரம் “இன்பமும் பொருளுமறனு மொன்றாங், கன்பொடு புணர்ந்தவைந்திணை மருங்கிற், காமக்கூட்டங் காணுங்காலை, மறையோரதே ஏத்துமன்ற, லெட்டனுட்டுறையமெ, நல்வாழ்துணைமெயோரியல்பே" என்னும் இல்வாழ்க்கைத் துணைநலங் கொண்டுவாழ்வோர்க்கு இனிது நலமுடியுமென்பதற்குச் சார்பாய் அறநெறித்தீபம் "மனைவாழ்வே யறநெறியில் வாழ்க்கை துணைநலங் கொண்டான், வனநெறிக்குமேலாய மாண்புடையா ளமைவாளேல், இனமரபு மெழிலுரவு மில்லறமே நல்லறமாய், மனவளமு நிலவளமும் வாழ்க்கைசுகந் தருமமால்" என்னும் ஆதாரங்கொண்டு கற்பிற்கினிய மாண்புடையாள் வாழ்க்கைத் துணைநலம் ஆவளேல் நீர்வளம் நிலவளம் பெருகி சுகவாழ்க்கைப் பெறுவானென்பது விரிவு.

2.மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்.

(ப.) மனை - இல்லத்தில், மாட்சி - கற்பினும் அறத்தினுஞ் சிறந்த, யில்லாள்க - மனையாட்சிகள், ணில்லாயின் - இல்லாமற் போவார்களாயின், வாழ்க்கை - இல்லறசுகம், யெனைமாட்சித் - மற்றுமேனையசம்பத்து, தாயினும் - பெருகி யிருப்பினும், மில் - சுகவாழ்க்கை யில்லை யென்பது பதம்.

(பொ.) வாழ்க்கைத்துணைவிக்குக் கற்புங் கருணையும் இல்லைாயின் மற்றும் ஏனைய சம்பத்திருந்தும் இல்வாழ்க்கை சிறப்பைத்தராவென்பது பொழிப்பு,

(க.) ஒருவனுக்கு தனசம்பத்து, தானிய சம்பத்து, குடும்பசம்பத்து நிறைந்திருப்பினும் தனது மனையாளுக்கு வேண்டிய கற்பின் சம்பத்து கருணைசம்பத்து இரண்டுமில்லாமற் போமாயின் அவ்வில்வாழ்க்கைக்கு யாதொரு சுகமுமில்லை யென்பது கருத்து.

(வி.) இல்லத்தை சிறப்பிக்கச்செய்யும் நல்லறமாம் இல்லாளின் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னும் நான்கு தன்மபாத நடை ஒழுக்கங்களின்றி வாழ்க்கைத்துணைக்கு ஒருவள் தோன்றுவாளாயின் அவனது வாழ்க்கையில் தனசம்பத்து, தானிய சம்பத்து, குடும்ப சம்பத்து நிறைந்திருப்பினும் இல் வாழ்க்கையின் சுகசம்பத்தில்லையென்று கூறியுள்ளவற்றிற்குச் சார்பாய் அருங்கலைச்செப்பு"மனையறமே காட்சி மனையாளின் கற்பு. இனையாயி னில்லறமேயில்", அறநெறிச்சாரம் "விருந்து புறந்தாரான் வேளாண்மெசெய்யான், பெருந்தக்கவரையும் பேணான் - பிரிந்துபோய்க், கல்லான் கடுவினை மேற்கொண்டொழுகுமேல், இல்வாழ்க்கை யென்பதிருள் என்றுங் கூறியுள்ள ஆதாரங்கொண்டு ஏனைய சிறப்புப் பெறினும் வாழ்க்கையில் மனயைாளினது கற்பின் சிறப்புங் கருணையினது சிறப்பும் இல்லையாயின் அவ்வாழ்க்கையில் யாது சிறப்புமில்லையென்பதே விரிவு.

3.இல்லதெனில்லவண் மாண்பானா லுள்ளதே
னில்லவண் மாணாக் கடை.

(ப.) இல்லதே - வாழ்க்கைக்கேது மில்லாதிருப்பினும், னில்லவண் உள்ளமனையாள், மாண்பானா - கற்பின் சிறப்பமைந்திருப்பாளாயின், லுள்ளதே - சகலபாக்கியமு மிருக்குமென்பதேயாம் னில்லவண் கற்பிநிலையில்லாத வளாயின், மாணாக்கடை - அவ்வில்வாழ்க்கை சகலராலும் இழிவடையு மென்பது பதம்.

(பொ.) இல்லத்தில் ஏதொரு பாக்கியமில்லாதிருப்பினும் இல்லாள் நல்லொழுக்க நல்லமதியாம் கற்பமைந்திருப்பாளாயின் சகல பாக்கியங்களும் இருக்குமென்பது பொருந்தும். அங்ஙனம் இல்லாளாயின் அவ்வில்லம் சகலராலும் இழிக்கு மென்பது பொழிப்பு.

(க.) நல்லொழுக்கம், நல்லமதி, நற்கடைபிடி அமர்ந்த கற்புடைய மனையாளிருப்பாளாயின் அவளுடன் சகலபாக்கியமும் பொருந்தவிருக்கும். நல்லொழுக்க நல்ல மதியற்று கற்புநிலை கடந்திருப்பாளாயின் அவ்வில்லத்தில் யாதுபாக்கிய மிருந்தும் இல்லையென்னும் இழிவையே தருமென்பது கருத்து.