பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 669


விருத்தி செய்யவேண்டுமென்னும் அவா மிகுத்து இல்லாளை சேர்த்துக் கொண்டவன் அத்தன்மத்தை மறந்து இல்லாள் இன்பத்திலேயே ஆழ்ந்து விடுவானாயின் மேனோக்கும் தன்மபயன் யாதொன்றையும் அடையான் என்பது விரிவு.

2.பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர்
நாணாக நாணத் தரும்.

(ப.) பேணாது - இல்லறத்தை யிச்சியாது, பெண்விழைவா பெண்ணினின்பத்தையே யிச்சிப்பவனது, னாக்கம் - செல்வமானது, பெரியதோர் - ஓர் பெரியதாயினும், நாணுக - ஒடுக்கத்திற்கொப்பாய, நாணு - அழிவை, தரும் - கொடுக்குமென்பது பதம்.

(பொ.) இல்லறத்தை இச்சியாது பெண்ணினின்பத்தை இச்சிப்பவனது செல்வமானது ஓர் பெரியதாயினும் ஒடுக்கத்திற்கு ஒப்பாய அழிவை கொடுக்கும் என்பது பொழிப்பு.

(க.) இல்லறத்திலிருந்து நல்லறத்தை நடாத்திக்கொள்ள விருப்புற்றவன் பெண்ணினின்ப விருப்பில் ஆழ்ந்துவிடுவானாயின் மிக்க செல்வமிருப்பினும் ஒடுங்கி ஒழிந்துபோமென்பது கருத்து.

(வி.) அதிக செல்வத்தைப்பெற்றும் இல்வாழ்க்கைப் பெறவேண்டு மென்னும் விருப்புற்றும் அவற்றைப் பேணாது இல்லாள் இன்பத்தில் ஆழ்ந்து அவள் வாய்மொழி கோணாது சேருவோனுக்குள்ள ஓர் பெரிய செல்வமும் ஒடுங்கி தனக்கும் அழிவைத்தரும் என்பது விரிவு.

3.இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மெ யெஞ்ஞான்றும்
நல்லாரு ணாணுத் தரும்.

(ப.) இல்லாள்கட் - தனது மனைவி வாக்கிற்கு, டாழ்ந்த - அடங்கிநடக்கும், வியல்பின்மெ - செய்கையையுடையோனுக்கு, யெஞ்ஞான்றும் - எக்காலத்தும், நல்லாரு - பெரியோர்கள்முன், ணாணுத்தரும் - அச்சத்தைக்கொடுக்குமென்பது பதம்.

(பொ.) தனது மனைவி வாக்கிற்கு அடங்கி நடக்கும் செய்கையை உடையோனுக்கு எக்காலத்தும் பெரியோர்கள் முன் அச்சத்தைக் கொடுக்கும் என்பது பொழிப்பு.

(க.) துறந்த நல்லோர்வரினும் துறவா நல்லோர் வரினும் அவர்களுக்கு செய்ய வேண்டிய தன்மத்தை மனைவியை வேண்டி செய்வதானது எக்காலும் அவனை நாணும்படி செய்யும் என்பது கருத்து.

(வி.) இல்வாழ்க்கையே இல்லறத்தை நாடிநிற்றலால் இல்லோனை நாடிவரும் துறந்தார்க்குந் துறவாதவர்க்கும் இறந்தோர்க்குந் துணைமுதலவன் தன்மனைவியை முதலாகக்கொண்டு அவள் வாக்குக்கு எதிர்பார்ப்பது தனக்கு வெட்கத்தை உண்டு செய்தலால் நல்லோர்முன் நாணுத்தரும் என்பது விரிவு.

4.மனையாளை யஞ்சு மறுமெயிலாளன்
வினையாண்மெ விரெய்த லின்று.

(ப.) லாளன் - மனையறம் நடாத்தும் புருடன், மனையாளை - தன் மனைவிக்கு, யஞ்சு - பயந்து நடந்துவருவானாயின், மறுமெயி - மற்று மெடுக்குந் தேக, வினையாண்மெ - செய்தொழிலுட் புருடச் செயலை, வீரெய்த - துணிந்துசெய்த - லின்று - இல்லாமற்போமென்பது பதம்.

(பொ.) மனையறம் நடாத்தும் புருடன் தன் மனையாளுக்கு பயந்து நடந்து வருவானாயின் மற்றும் எடுக்குந் தேகச் செய்தொழிலுள் புருடச் செயலை துணிந்து செய்தல் இல்லாமற்போம் என்பது பொழிப்பு.

(க.) இல்லறத்தை இனிது நடாத்தவேண்டிய புருடன் தன் மனையாளுக்கு பயந்து பயந்து நடத்திவரும் இயல்பால் மரித்து மறுமெய்தோன்றினும் புருடச்செயலற்று யாதொரு பயனுக்கும் உதவாமற்போவான் என்பது கருத்து.