60 / அயோத்திதாசர் சிந்தனைகள்
சீவகசிந்தாமணி
காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தைபோல
மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயன முநினி
யாசற நடக்குநாளு ளைங்கணைக் கிழவன் வைகிப்
பாசறை பரிவுதீர்க்கும் பங்குனி பருவஞ் செய்தான்.
சிலப்பதிகாரம்
வெள்ளிமால் வரைவியன் பெருஞ்செடிக்
கள்ளவிழ் பூம்பொழிற் காமக் கடவுட்கு
தென்திசை மருங்கினோர் செழும்பதி தன்னுள்
இந்திரன் விழுவுகொண் டெடுக்குநாளிதுவென.
புத்தரவர்கள் முப்பதாவது வயதில் ஞான நிலைபெற்ற ஆதரவைக் கொண்டு புத்தசங்கத்தோர்களும் மேற்கூறிய வயதில் துறவடைந்து வந்தார்கள்.
நிகண்டில் அருகனை முடிதரித்தாள் அம்பிகையறத்தின் செல்வி என விளங்கிய அவ்வையம்மனா லருளிய,
மூதுரை
முப்பதா மாண்டளவின் மூன்றத்தொருபொருளை
தப்பாமற்றன் கைபடானாயிற்- செப்புங்
கலையளவே யாகுமாங் காரிகையார் தங்கண்
முலையளவே யாகுமா மூப்பு.
காமனையுங் காலனையுஞ் செயித்து மரணமில்லாமல் உலகத்தில் இருக்கின்றார்களா வென்னும் சில சங்கை யுண்டாகும். அதாவது சகல பற்றுக்களையும் நீக்கி பிறவியை செயித்துக் கொண்டவர்கள் இறப்பிறப்பற்றவர் களாகையால் மரணசெயம் பெற்றவர்களென்றும் பாச பந்தத்தில் உழன்று தீவினைக்கீடாய் ஜெநநமெடுப்பவர்கள் மரண துக்கத்தில் அழுந்தி திரிபவர்களென்றும் ஆப்தர்கள் கூறியிருக்கின்றார்கள்.
சீவக சிந்தாமணி
அல்லித்தா ளற்றபோது மறாத நூலதனைப் போல
தொல்லைத்தம் முடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்கா
புல்லிக்கொண் டுயிரை சூழ்ந்து புக்குழிபுக்கு பின்னின்
றெல்லையி றுன் பவெந்தீச் சுட்டெரித்திடுங்களன்றே.
தியானம்
இன்னாப்பிறவியிகழ்ந்தோய் நீ யிணையிலின்ப முடையோய் நீ
மன்னா உலகமறுத்தோய் நீ வரம்பில் காட்சிக் கிறையோய் நீ
பொன்னாரிஞ் சிப்புகழ் வேந்தே பொறியின் வேட்கைக் கடலழுந்தி
யொன்னார் வினையினுழல் வேங்களுயப்போம் வண்ணமுரையாயே.
தாயுமானவர்
சந்ததமும் வேதமொழி யாதொன்றை பற்றினதுதான் வந்து முற்று மெனலால்
சகமீதிருந்தாலு மரணமுண்டென்பதூ சதாநிஷ்டர் நினைவதில்லை.
மச்சமுனிவர்
இறந்துபோனவர்க்கென்ன மெய்ஞானங்காண் / ஏச்சி ஏச்சி இகத்துள்ளோர் தூடிப்பார்
மறந்து செத்து மறுசென்மம் புக்கினால் / வருவதாகிய சஞ்சலமென்னமோ,
அகப்பேய்சித்தர்
பாவந்தீர வென்றா லப்பேய் பற்றறவேணுமடி
சாவதுமில்லையடி யகப்பேய் சற்குரு பாதமடி
இடைக்ககாட்டு சித்தர் பாடல்
பற்றே பிறப்புண்டாக்குந் தாண்டவக்கோனே அதை
பற்றாதறுத்து விடு தாண்டவக்கோனே.
சாகாதிருப்பதற்கு தான்கற்குங் கல்வியன்றோ
வாகானமெய்க்கல்வி வகுத்தறி நீ கன் மனமே.
அவ்வையார் ஞானக்குறள்
சாகாதிருக்குந் தலமே மவுன மது / ஏகாந்தமாக விரு.
இவ்வகையான கருத்தை அநுசரித்து வேறு சில சரித்திரங்களிலும் பாவத்தின் சம்பளம் மரணம், புண்ணியத்தின் சம்பளம் நித்திய சீவனென்று குறித்திருக்கின்றார்கள்.
- 1:30; சனவரி 8, 1908 -