பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

690 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கடவுளந்தாதி "மெய்ப்பொருளுச்சிக்கு ளுச்சிதாகவிருக்குமப்பா, வைப்பினின் மாணிக்கப் பொக்கிஷமே மணிமாமகுடச், செப்புக்குளேற்றுத் திருவிளக்குள்ளொளி தீபமது, கைப்பொருடன்னினு மெய்ப்பொருளாமது கண்டவர்க்கே" பட்டினத்தார் பூரணமாலை "பாசமுடலாய்ப் பசுவதுவுந்தானுயிராய், நேசமுடநிபொருளாய் நின்றனையே பூரணமே" என்பதுகொண்டு நிலையாயமெயாம் பொய்ப்பொருள் காட்சியையகற்றுங்கால் நிலையாய மெய்ப்பொருள் ஏதேனும் உண்டோவென்னும் வினாவெழுஉ மென்று எண்ணி நிலைமெய்யை விளக்கிய விரிவு.

31. ஊழ்

ஊழ் என்பது நல்வினை தீவினைகளது பயனிலை. தீச்செயலாம் தீவினைக்கு உட்பட்டவன் இல்லறவியல் மாளாதுன்புற்று, மாறிமாறி பிறக்கும் பிறப்பினால் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனை இப்பிறப்பில் அவனவன்செய்யும் முயற்சி கூடுவதிலுங் கெடுவதிலும் அறிந்துக்கொள்ளுவது போல், தோற்றும் பொருட்கள் யாவும் நிலையில்லாததென்று உணர்ந்து புத்தசங்கஞ் சேர்ந்த துறவி தான் முற்பிறப்பிற் செய்த நல்வினைப்பயனால் சத்தியசங்கஞ் சேர்ந்து சமண நிலையைப் பெற்று, அதனின்று நல்வினையை தினேதினே பெருக்கிப் பிறவித்துன்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டுமென்னும் உறுதிபெறுதற்காய் நல்வினை தீவினையாம் ஊழினை விளக்கலானார்.

1.ஆகூழாற் றோன்று மசைவின்மெ கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி

(ப.) அசைவின்மெ - நிலையாய மெய்ப்பொருள், ஆகூழாற் - ஆகக்கூடு முயற்சியால், றோன்று - காணப்படும், கைப்பொருள் - தான் முயன்று சேகரித்தப்பொருள் போகூழாற் - தன்னை யறியாமற்போகுஞ் செயல்போல், றோன்றும் - விளங்கும், மடி - நிலையமென்பது பதம்.

(பொ.) நிலையாய மெய்ப்பொருள் ஆகக்கூடும் முயற்சியால் காணப்படும். தான் முயன்று சேகரித்தப்பொருள் தன்னையறியாமற் போகுஞ் செயல்போல் விளங்கும் நிலையம் என்பது பொழிப்பு.

(க.) தானே முயன்று சேகரித்தக் கைப்பொருள் தன்னை அறியாது ஒழிந்து விடுவதுபோல தான் சேகரிக்க முயன்ற நல்வினையாம் அசைவிலா மெய்ப்பொருட் காட்சி தன்னை அறியாது தானேதானாக விளங்கும் என்பது கருத்து.

(வி.) தானேதானே இடைவிடாது பயின்றுவந்த நல்வினையின் பயனாய மெய்பொருட்காட்சித் தானே தானாகவிளங்கும். அஃதெவ்வகையால் என்னில் தானே தானே முயன்று சேகரித்தப் பொருள் தன்னையறியாது அகன்று விடுவதுபோல என்பது விரிவு.

2.பேதை படுக்கு மிழவூழறிவ கற்று
மாகலூ ழுற்றக் கடை.

(ப.) பேதை - அஞ்ஞானியானவன், படுக்கு - தோய்ந்துநிற்கும், மிழவூழ் - கெடுவினையானது, ழறிவகற்று - விவேகத்தைக் குறைப்பதன்றி, மாகலூ - இனியாகவேண்டிய நல்வினை யேதுக்கும், ழுற்றக்கடை - இல்லாது இழி பிறவியிற் சேர்ப்பிக்குமென்பது பதம்.

(பொ.) அஞ்ஞானியானவன் தோய்ந்து நிற்கும் கெடுவினையானது விவேகத்தைக் குறைப்பதன்றி இனியாகவேண்டிய நல்வினை ஏதுக்கும் இல்லாது இழிபிறவியிற் சேர்க்கும் என்பது பதம்.

(க.) அறிவற்றவன் செய்துவருங் கொடுவினைகளால் உள்ள அறிவுங் கெடுவதுடன் இனி மேற்பிறவிக்கு ஏகும் நல்வினைக்கு ஏதுவின்றியுந் தாழ்ந்த நிலையே அடைவான் என்பது கருத்து.

(வி.) அறிவற்று தனது மனம்போனவாறு செய்துவரும் கொடிய வினைகளால் உள்ள அறிவும் பாழாகிவிடுவதுடன் மாளாபிறவி துக்கத்திற்கு ஆளாகுந்