பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு



பசியில்லா வரங்கொடுப்போம் பழையதிருந்தால் போடும் I: 173.
பசுவின் தோலை போர்த்துலாவும் புலிபோல் I: 216.
பருப்பில் நெய்யை விட்டது போலும் பாலில் பழம் விழுந்தது போலும் I: 138, 141.
பனங்காட்டுநரி சலசலப்புக் கஞ்சாது போல் I: 446.
பன்றிகளின் முன் முத்துக்களைப் போடுவது போல் III: 68, 93.
பழயன கழிதலும் புதியன புகுதலும் வழுவலகால வகையினானே I: 293, 439. III: 75.
பழைய குருடி கதவைத் திறவடி II: 136.
பல்லிகளையும் பட்சிகளையும் பாதுகாக்கவேண்டியது, பாம்பையுந் தேளையும் தலைநசுங்கக் கொல்லவேண்டியது போல் I: 364.
பலப்பட்டரை சாதிக்கு பவுஷியமில்லை, குலங்கெட்ட சாதிக்குக் கோத்தரமில்லை I: 25.
பார்ப்பான் வீட்டு பல்லி முட்டை, பறையன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும் I : 208.
பாப்பானுக்கு மூப்பான் பறையன் கேழ்ப்பாரில்லாமற் கீழ்ச்சாதியானான் I:333,388.II:67.
பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழனைப்போல் I: 159, 162, 178, 498.
பாலூட்டுங்கிழவிகளுக்கு சோறூட்டுவது போல III: 66.
பிஞ்சியில் பழுக்கப்பார்ப்பது நஞ்சை உண்பதொக்கும் I: 83.
பிள்ளையார் முதுகைக் கிள்ளிவிட்டு நெய்வேத்தியங் கொடுப்பது போல் I: 51.
பிள்ளையையுங்கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல் I: 30, 47, 50, 295, 391.
புலியானது பசுவின் தோலைப் போர்த்து பகிரங்கத்தில் உலாவுவதுபோல் I: 320 III: 70.
புலியைக்கண்டு பூனைச் சூடிக்கொள்ளுவதுபோல் I: 339, 471.
பெண்களுக்குப் பேயுமிதங்கும் I: 696.
பெற்றவட்கே தெரியுமந்தவருத்தம் பிள்ளை பெறா பேதையறிவாளோ பேரானந்தம் II: 548.
பொல்லார்க்குக் கல்விவரில் கர்வமுண்டாம், வீணருக்கு வித்தைவரில் சொத்தையுண்டாம் I: 49, 159, 395.


மனையுள் விருட்சமும் மக்கள் கல்வியும் மாறா சுகந்தரும் I: 680.
மலடியென்று கூறி அவளுக்கு மைந்தனுண்டென்னலாமோ I: 599.
மயிலைக்கண்ட வான்கோழி நடமிடுவதுபோல் I: 339.
மனம் போல வாழ்க்கைப் பெறுவது மாங்கல்ய சுகம் I: 416.
மாட்டிறைச்சியைப் பறிகொடுத்த பாப்பாத்தி போல் II: 87.
மாலுமியில்லா மரக்கலமேறலாகாது என்பது போல II:524.
மானங் காய்ந்தால் போடி மழை பெய்தால் வாடி III: 5.
மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் I: 214.
மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையுங் காட்டுவது போல் I: 240, 445. III: 4.
மீனுக்குங் காவல் பூனைக்குந் தோழனுமாயிருப்பது போல் I: 445.
மீனை மீன் பிடித்துண்பது போல் I: 65.