பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
மெய்ப்பு பார்க்கும் பொழுது ஏதோ ஒரு சிக்கல்

8/அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு விவேகமுள்ளக் கிறிஸ்தவர்கள் தங்களை அஞ்ஞானிகளா ஞானிகளா என்றுணர்ந்து அடங்கிக் கொள்ளுவார்கள். விவேகமற்றக் குடி, விபச்சாரம், பொய், களவு முதலிய துற்கிருத்தியம் நிறைந்த கிறிஸ்தவர்கள் மற்றவர்களை அஞ்ஞானிகளென்று கூறி அவமதிப்பது அவர்கள் அவிவேக சுவாபம். அதாவது, தென்தேசத்திலுள்ள சில கல்வியற்றோர் தங்கள் பொறாமெ குணத்தால் பறையனா தமிழனா என்று உசாவுகின்றார்கள். அவ்வகை அறிவிலி வினாக்களை உணரா அவரினுமறிவிலி மூகைகள் தாங்கள் தமிழனா யிருந்தும் பறையனென்று பதில் கூறுவதுபோல் கிறிஸ்தவனா அஞ்ஞானியா வென்றுசாவும் அறிவிலிகடாக்களுக்கு அஞ்ஞானியென்று விடை பகரும் அறிவிலிகளா லஃது நிலைத்திருக்கின்றது. பறையனா தமிழனா என்று கேட்போனைத் தடுத்து ஏதையா நீர் வாசித்தவரா, வாசிக்காதவரா, பறையனென்றால் பராயர்கூறுஞ் சாதிப்பெயர், தமிழனென்றால் பாஷைப்பெயர் இவ்விரண்டுங் கெட்டக் கேழ்வியைக் கேழ்க்காதீர். தாங்கள் வாசித்த அளவினிலையிற் கேழ்க்கவேண்டு மாயின் பறையனா - பார்ப்பானா, தமிழனா - தெலுங்கனாவென் றுசாவுவீரேல் அஃதுமது விவேகத்தை விளக்குமென்று மறுத்துக் கூறுவானாயின் அன்றே அவ்வறிவிலி வினாக்களடிப்பட்டுப்போம். அதுபோல் கிறிஸ்தவனா அஞ்ஞானியாவென்று சாவுவோனை தடுத்து கிறிஸ்தவனென்பது மதப்பெயர், அஞ்ஞானியென்பது செயற் பெயர் இவ் விரண்டு வார்த்தையின் பொருளறியா பஞ்சகாலத்து அஞ்ஞானியாயிருந்து கொண்டு எம்மை அஞ்ஞானியாவென்றுசாவுவது அறிவின்மையே என்று கூறு வார்களாயின் அன்றே கிறிஸ்து அஞ்ஞானிகளின் கேழ்விக ளடங்கிப்போம். கிறிஸ்தவனா மகமதியனா என்பது மத வினாக்கள். அஞ்ஞானியா மெஞ்ஞானியா என்பது செயல் வினாக்கள். இவ்விரு வினாக்களின் பேதமறியா பேதைகளிடத்து வாது புரிவது பிழை யாதலின் தாங்களவர்கள் வார்த்தையை மதியாதிருப்பதே மகிழ்வாம். -1:33; சனவரி 29, 1908 -

13. இராஜாம்பாள் ஓர் இனிய தமிழ் நாவல்

மேற்கூறிய பெயர்வாய்ந்த ஓர் புத்தகத்தைக் கண்ணுற்றோம். அதன் 34வது பக்கம் 21வது வரியில் ஓர் பண்ணைக்கார பறையன் முநிசாமி என்போன் சாஸ்திரியார் வீட்டில் வந்துள்ள பாம்பை அடிக்க உட்செல்லுங் கால் நடுங்கிக்கொண்டே சென்றானாம். அவன் நடுங்கிக்கொண்டே சென்ற காரணம் யாதென்றாலோ அவன் பாம்புக்கு பயப்படவில்லை, சாஸ்திரியார் வீட்டிலுள்ள இலட்சுமி நீங்கிவிடுவாளென்று நடுங்கி உள்ளுக்குச் சென்றானாம். அந்தோ! பறையரென்றழைக்கப்படுவோர் பொய்மூட்டை களைக் கட்டவாயினும் பொய் மூட்டைகளை அவிழ்க்கவாயினு மறியார்கள். அடா யாருமற்ற வீட்டில் இலட்சுமி இருக்கின்றாளென்றால் அவளுக்குக் கண்ணும் மூக்கும் இருக்கின்றதாவென்பான். அக்கால் சாஸ்திரியாரும் சாஸ்திரியார் சரிதத்தை எழுதியவரும் தங்கள் பொய் மூட்டைகளைப் புரட்டி புரட்டிப் பார்க்க நேரிடும். அத்தகையப் பொய் மூட்டைகளைப் புரட்டுவதினும் பண்ணைப்பறையன் காலினால் மிதித்துத் துவைத்த அரிசிமூட்டை லட்சுமி சாஸ்திரியார் வீட்டிலிருக்கின்றாளா இல்லையா என்றும் பண்ணைப் பறையன் காலினால் மிதித்துத் துவைத்தப் புளிமூட்டை லட்சுமி சாஸ்திரியார் வீட்டி லிருக்கின்றாளா யில்லையா வென்றும், பண்ணைப் பறையன் காலினால் மிதித்துத் துவைத்த வெல்ல மூட்டை லட்சுமி சாஸ்திரியார் வீட்டிலிருக் கின்றாளாயில்லையாவென் றாராய்வரேல் இலட்சுமி சம்பத்து விளங்கும்.

சில விளங்காமெய்க்குக் காரணம் சாதிபோர்வை கொண்ட மூதேவி களாகுஞ் சோம்பேரிகளைக் கண்டவுடன் விலகினும் விலகுவள். பண்ணைப் பறையனென் போனை அவ்விலட்சுமி கண்டாலோ அப்பா மகனே என்ற ணைத்து உன் முயற்சியாம் உதையினாலும் மிதியினாலும் அரிசி உருக்கொண்டு