பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /19


29. ஐரோப்பியர் அன்பு

ஐரோப்பியர் அன்பு என்பதில் சிலர் பொறாமெயும், சிலர் மறுட்சியும், சிலர் வெறுப்புங் கொள்ளுவார்கள், காரணம் யதார்த்த குணம் விளங்காக் குறையேயாம். சுதேசிகள் சுதேசிகளென சொல்லிக்கொண்டு எதிர்வீட்டுக் காரனுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் சாதி வித்தியாசமும், பக்கத்து வீட்டுக் காரனுக்கு மூன்றாம் வீட்டுக்காரன் சாதி வித்தியாசமும், மூன்றாவது வீட்டுக் காரனுக்கு நான்காம் வீட்டுக்காரன் சாதி வித்தியாசமும் உண்டு.

இத்தகைய வித்தியாசங்களினால் பக்கத்து வீட்டுக்காரன் இறந்து விட்டானே நீரேன் போகவில்லை என்பாராயின் நாங்கள் வேறு சாதி அவர்கள் வேறு சாதி என்பார்கள்.

அல்லது நான்காம் வீட்டுக்காரன் தவறியேதோ ஓர் ஊக்கத்தினாலோ இளப்பினாலோ கீழேவிழுந்துவிடுவானாயின் அவனருகிற் செல்லாமலும், அவனை எடுக்காமலும், அவனது ஆயாசத்தைத் தெளிவிக்காமலும் தூரவே நின்றுக்கொண்டு அவனென்னசாதி, எவ்வூரானென்றுக் கேட்டுக் கொண்டே இருப்பார்களன்றி அவன் நம்மெய்ப்போன்ற மனிதவடிவினனாச்சுதே அவனுக்குள்ள ஆபத்தைத் தீர்த்து ரட்சிக்கவேண்டுமென்னும் அன்பே இவர் களுக்குக் கிடையாது. மனிதர்களுக்குள் மனிதர்களை ஆதரிக்க அன்பில்லாதவர் கள் மற்ற ஜெந்துக்களின் மீது ஜீவகாருண்யம் வைப்பார்களோ.

இத்தகைய காருண்யமற்றவர்கள் வசம் சுதேச ராட்சிய பாரத்தை ஒப்படைத்தால் யாரையார் காப்பாற்றுவார்களென்பதைக் கல்வி மிகுந்தக் கனவான்களே கண்டுக்கொள்ளவேண்டியது. ஐரோப்பியருக்குள்ளக் அன்பின் மிகுதியை அனுபவத்தினாலும், காட்சியாலும் அறிந்துக்கொள்ள வேண்டிய தேயாம். அதாவது, மைசூரிலிருந்த ஓர் ஐரோப்பிய உத்தியோகஸ்தர் ஓடத்திற் செல்லுங்கால் ஓடங்கவிழ்ந்து அதிலுள்ள சகலருந் தப்பித்துக்கொள்ள ஒரு சுதேசி நீரில் தவிப்பதைக் கண்ட ஐரோப்பியர் அவனை நீரினின்று எடுத்துக் கரைக்குக் கொண்டுவரும் போது பெருவெள்ளத்தால் பாறையில் மோதப்பட்டு மாண்டு போய்விட்டார். தான் அந்தஸ்துள்ள உத்தியோக துரை மகனென்று மேன்மெயாகத் தன்னைக் தப்ப வைத்துக்கொள்ளாமல் ஏழைக் கூலியாளனைத் தன்மெயொத்த மனிதனென்னுங் கருணைவைத்து காப்பாற்றுவதற்குத் தன்பிராணனைக் கொடுத்துவிட்டார். தேசாபிமானிகளே, அன்பின் நிலையும், அதன் காட்சியும் யாவரிடத்து விளங்குகிறதென்று கண்டறியுங்கள்.

இத்தகைய அன்புமிகுத்தோர்வசம் இராட்சியபாரமிருக்குமாயின் சகல குடிகளும் சீர்பெறுவார்களா, அன்பென்பதற்று பொறாமெயும், வஞ்சினமும், பொருளாசையும் உள்ளவர்பால் இராட்சியபாரத்தை அளிப்பதினால் சகல குடிகளும் சீர்பெறுவார்களா என்பதை சுதேசிகளுக்குள் சுதேசிகள் உணரவேண்டியதேயாம்.

- 3:16; செப்டம்பர் 29, 1909 –

30. தன்னிற்றானே கேட்டைத் தேடிக்கொள்பவன்

ஒவ்வொரு மனிதனுந் தனக்குண்டாகுங் கேடுகளையும், துன்பங் களையும் சிந்திப்பானாயின் அவனுக்கு நேரிட்டுள்ள கேட்டின் பலன் தானே விளங்கும். அதாவது, ஒருவன் தனது விவேகக் குறைவினால் மற்றொருவனைக் கெடுக்கவும், துன்பப்படுத்தவும், அவதூறு செய்யவும் எண்ணங்கொண்டு தனதுள்ளத்தில் இராகத் துவேஷத்தைப் பெருக்கிக்கொள்ளுவானாயின் அக்கெடு எண்ணம் அவனையே கேட்டிற்குக் கொண்டுபோம்.

அதற்குப் பகரமாய் "கெடுவான் கேடு நினைப்பானென்னும் பழமொழி யுமுண்டு." மனமே புருடனென்று உணர்ந்தோர்க்கு மனத்தினால் உண்டாகுங் கேடுகளும், மனத்தினால் உண்டாகுஞ் சுகங்களும் எளிதில் விளங்கும்.

மனத்தினது செயலையும், அதன் பலனையும் உணராதவர்களுக்கு விளங்காது. ஆதலின் மகாஞானிகளில் ஒருவர் ஒருவனுக்குண்டாயுள்ள