பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /47

எனக் கூறியுள்ள நீதி நூற்களையும், அதன் செயலையுமறியா அற்பர்கள் தங்களது செயலை உணராது வீணேயிழிவு கூறி அறுபது லட்சமக்களுக்கும் அனந்த மனத்தாங்கலை உண்டு செய்து வருகின்றார்கள் அத்தகையோரிழிச் சொற்களுக்கும், வஞ்சகச் செயலுக்கும் அஞ்சாமலும், அயாசங் கொள் ளாமலும் இருப்பீராயின் அவர்களடையும் பயனைக் கூடிய சீக்கிரம் கண்டுகளிப்பீராயினுந் தற்காலந் தங்களையுந் தங்கள் சந்ததியோர்களையுங் கார்த்துரட்சித்துவரும் ஆங்கிலேய துரைமக்களின் நன்றியை மட்டிலும் மறவாதிருக்க வேண்டுகிறோம்.

- 4:22; நவம்பர் 9,1910 -
 

64. இராம அயனமே சாம அயனமாம்

அன்பரே இராமரென்னும் அரசருடைய சரித்திரம் புத்த பிரான் காலத்திற்குப் பின்பே தோன்றியுள்ளதென்பதை வால்மீகர் கூறியுள்ள இராமாயணம் ஆரண்ய பருவம் பதினைந்தாவது அத்தியாயத்தில் அநுமார் பௌத்த வியார சிறப்பைக் கூறியுள்ள சுலோகத்தினாலும், வசிஷ்டர் இராமருக்குப் போதித்த வாசிஷ்ட உத்தாலகன் கதையில் புத்தர் தாமரை புட்பத்தில் உழ்க்கார்ந்தது போல் உத்தாலகன் உழ்க்கார்ந்தானென்னும் உறுதி மொழியாலும் உணர்ந்துக் கொள்ளலாம். இராமாயணம் கிரேதாயுகத்தில் நடந்தது திரேதாயுகத்தில் நடந்த தென்பதற்கு தக்க சரித்திர ஆதாரங்களேனும், செய்யுள் ஆதாரங்களேனுங் கிடையாது. ஆனால் இராமனென்னும் அரசனிருந்ததும் மெய், அவருக்கு சீதையென்னுந் தங்கையும், இலட்சுமணரென்னும் தம்பியும் இருந்ததும் மெய் அவருக்கு வசிஷ்டரென்னும் புத்தகுருவிருந்து ஞானோபதேசஞ் செய்ததும் மெய். அம்மூவரும் அவரது சத்தியோபதேசத்தில் நிலைத்து பன்னக வியாரத்தில் தங்கி பனிரண்டு வருடங் கடந்து தந்தையின் சொற்படி தேசஞ்சென்று அதை ஏற்று சிலகாற் சென்று மடிந்ததும் மெய்யே. மற்றப்படி சீதையை ராமருக்குப் பெண்சாதியென்று ஏற்பட்ட சரித்திரம் விஷ்ணுவே இராமரென்னும் அவதாரங் கொண்டுள்ளாரென்று கூறுகிறபடியால் விஷ்ணுவின் மதமும் அக்கதைகளும் இராமாநுஜர் காலமாகும். இருநூறு வருடங்களுக்குட்படத் தோன்றிய கதையேயாதலின் அக்கால் இலங்கையில் பத்துத்தலை ராவணனிருந்ததுங் கிடையாது. அதனால் சீதையை பத்துத்தலை ராவணன் பூமியுடன் தூக்கிக்கொண்டு போனானென்று வால்மீகர் கூறியுள்ளதும் பொய், சீதையை ராவணன் கையைப்பிடித்துத் தூக்கிக்கொண்டு போனானென்று கம்பர் கூறியுள்ளதும் பொய். இவ்விருவரையும் பொய்யரென்று கூறிய காரணம் யாதென்பீரேல் அவர்களது புராண சரித்திரங்களைக்கொண்டே கூறியுள்ளோம். அப்புராணமோ யாதெனில், அரிச்சந்திர புராணமேயாம். அதிற் கூறியுள்ளவை ஏதெனில், பூலோகத்தில் பொய்ப்பேசாது மெய்ப் பேசுகிறவர்கள் யாரென தேவர்கள் உசாவிய போது அரிச்சந்திரன் ஒருவனே மெய்யன் மற்றய யாவரும் பொய்யரென்று தீர்த்துள்ளபடியால் வால்மீகரும், கம்பரும், பொய்யருள் சேர்ந்துவிட்டது கண்டு சீதையை பூமியூடு தூக்கிச் சென்றதும் பொய், கையைப்பிடித்துத் தூக்கிச்சென்றதும் பொய்யெனத் துணிந்துக் கூறியுள்ளோம். பத்துத்தலையையுடைய ஓர் மனிதனும் இருந் திருப்பானா மற்றய மனிதர்களைப் போல் அவனது செயல்களும் நிகழ்ந் திருக்குமா என்பதைக்கூர்ந்து உசாவுவீராயின் மெய்சரித்திரங்களையும், பொய் சரித்திரங்களையும் எளிதில் அறிந்துக்கொள்ளலாம்.

- 4:23, நவம்ப ர் 16, 1910 -
 

65. குலத்தளவேயாகுங்குணம்

என்னும் பூர்வ மிலேச்ச புத்தி போகின்றதா பாருங்கள்
சென்னை ஜார்ஜ் டவுனிலுள்ள ஒரு தமிழர் வீட்டில் பர்ம்மா பிரீஸ்டொருவர் வந்து தங்கி சமஸ்கிருதங் கற்றுக்கொள்ளுவதற்கு (இவர் ஓர் அண்டர் கிராடியுயேட்) ஓர் வைணவ பார்ப்பாரைத் தருவித்து வாசித்து வருங்கால்