பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /69

சாதனங்களை சரிவரச்செய்து அறவண நிலையாம் நிருவாணமுற்று பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காட்டை ஜெயித்துப் பரிநிருவாண சோதியுரு பெருநாளாம் திருநாளில் சோதியை வளர்த்திக்கொண்டாடும் உற்சாக நாளானது அக்டோபர் மாதம் 6ம் நாள் சுக்கிரவார முதல் ஆதிவாரம் மூன்று நாள்வரை நிறைவேறப்போகின்றபடியால் அன்பர்கள் ஒவ்வொருவரும் சுக்கிரவார மாலை தீபமேற்றும் மெழுகுவத்திகளும், புத்தகுருக்களுக்கு கனிவர்க்கங்களும் தங்களாலியன்ற உதவி புரிவதுடன் தங்கடங்கள் பெண்டு பிள்ளைகளுடன் சனிவார மாலை 6 மணிக்கு இராயப்பேட்டை பெளத்தாச்சிரம குருபூசை முதலிய வைபவங்களுக்கு வந்திருந்து பஞ்சசீலத்தை நிறைவேற்றி பௌத்தகுரு யு. இந்திர வின்சா சுவாமிகளால் பர்ம்மியர்களுக்கு பர்ம்மா பாஷையிலும், பெளத்த ஸ்திரீகளுக்கு கோ. சொற்பனேஸ்வரி அம்மனவர்களால் தமிழ் பாஷையிலும் போதிக்கும் பெளத்த தன்மத்தை செவியாறக் கேட்கும்படி வேண்டுகிறோம்.

- 5:17: அக்டோபர் 4, 1911 -
 

90. முனிசபில் ரோடுகளின் முறைப்பாடு

தற்காலஞ் சென்னை முநிசபில் எல்லைக்குள் தகுந்த மழை இல்லை யென்பது அனுபவம். இவ்வகை சரியான மழையில்லாத காலங்களில் பெரிய ரோடுகளிலும் துரைமக்கள் எப்போதும் போக்குவருத்துள்ள பாதைகளிலும் தண்ணீர் திட்டு திட்டாக தேக்கமுற்று நிற்குமாயின் மற்றுமுள்ள சிறு வீதிகளிலும் ஏழை எளியோர் வாசஞ்செய்யும் சந்துகளிலும் தண்ணீர் எவ்வகையாகத் தேக்கமுற்றிருக்குமென்பதை இவற்றை வாசிப்போரே தெளிந்துக் கொள்ள வேண்டியதுதான் காரணமோவென்னில் எக்காலுந் துரை மக்கள் போக்குவருத்துள்ள இராஜ வீதிகளிலேயே நீர்கள் தங்கி நிற்கவும், மோட்டார் வண்டிகளும், ரிக்ஷா வண்டிகளும், பைசைக்கல் வண்டிகளும் நீருள்ள பள்ளங்களுக்கு ஒதுங்கி நீரில்லாவழிகளில் ஓடவும், நீரில்லா வழிகளில் செல்லும் மக்களும் ஆடுமாடுகளும் தட்டுக்கெட்டுத் திகைத்து நீருள்ளப் பள்ளங்களில் விழவும், ஓரங்களில் ஒண்டித் தவிக்கவும் நேரிடுகின்றது.
இராஜபாட்டையை சற்றேனுங் கவனியாத முநிசபில் டிவிஷன் கமிஷனர்களும், மற்ற உத்தியோகஸ்தர்களும் சிறிய பாதைகளையும், ஏழை எளியோர் வாசஞ்செய்யும் வீதிகளையும் கவனிப்பார்களோ கவனியார்களோ என சந்தேகிக்க வேண்டியதாயிருக்கின்றது. இவற்றுள் அந்தந்த டிவிஷன் கமிஷனர்கள் தங்களை எலக்ஷனில் எடுக்கவேண்டுமென்று கோறி வீடுகடோரும் வண்டிகளைக் கொண்டுவந்து குடிகளை ஏற்றிச் செல்லுவோர் களை அவ்வெலக்ஷன் காலங்களில் காணக்கூடுமெயன்றி மற்றய காலங்களில் அவ்வீதிகளிலேனும் ரோடுகளிலேனுங் காண்பதே கிடையாது.
ஆதலின் இவர்களது கண்ணோக்கம் வீதிகளின் பேரிலில்லையென்றே விளங்குகின்றது. வீதிகளின் பேரில் கண்ணோக்கமும் குடிகளின் பேரில் அன்பு மிருக்குமாயின் பயிரங்கமாய ராஜபாதைகளுள் பள்ளங்கள் தோன்ற வும் நீர்கள் நிற்கவும் அதன்வழியே மோட்டார் கார்களையும், சைக்கல் களையும் விடுவதற்கஞ்சி நல்லபாதைகளில் விடவும் நல்லபாதைகளில் நடக்கும் மக்களும் மாடுகளும் நலங்குலைந் தொதுங்கவும் நீர் தங்கியுள்ளப் பள்ளங்களில் வீழவுமாய கஷ்டங்கள் நேரிடமாட்டாது.
இத்தகையக் கஷ்டங்களை அருகிலிருப்பவர்கள் கண்டு துக்கிக்க வேண்டியதாயிருக்கிறதே யன்றி அந்த டிவிஷன் கமிஷனர்களோ தங்களுக் கென்ன கஷ்டமுண்டென்னுந் தனியானந்தத்தி லிருக்கின்றார்கள். அந்தந்த டிவிஷன் கமிஷனர் உத்தியோகங்களை ஐரோப்பிய துரை மக்களே ஏற்றுக் கொண்டிருப்பார்களாயின் அதிகாலையில் எழுந்தவுடன் சைக்கலிலேனும், குதிரைகளிலேனும் ஏறி அவரது டிவிஷனிலுள்ள வீதிகளின் கேடுபாடு களையும், ரோடுகளிலுள்ளக் குறைகளையும் கண்ணாரக் கண்டு அவைகளை சீர்திருத்தத்தக்க முயற்சியினின்று குடிகளுக்கு சுகாதாரமளித்து வருவார்கள். ஐரோப்பிய துரை மக்களுக்கு அத்தகைய வேதுக்கள் உண்டாகுங் காரணமியா