பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 127

உடன் வந்தனராம். வேதியர் என்றால் வேதம் கற்றவர் என்று பொருளாம். வில்லின் வேதியர் என்றால், வில்வேதம் அதாவது வில்கலை பற்றிய நூல் கற்றவர் என்று பொருளாகும். இந்தப் பெயர் சுவையாயுள்ளது.

வில்லின் வேதியர் வாள்செறி வித்தகர். தொல்லை வாரணப் பாகரும் சுற்றினார் (13)

பகல் நீந்தி

பரதன் கேகய நாட்டிலிருந்து ஏழு பகல் நீந்தி அயோத்தியை அடைந்தானாம். கடந்து என்பதற்கு நீந்தி என்று கம்பர் கூறியுள்ளார். அந்தக் காலத்துப் பயணங்கள் நீரில் நீந்துவதுபோல் பாடுபட்டுச் செய்ய, வேண்டிய ஒன்றாகும் என்பது இதனால் புலனாகிறது.

ஆறும் கானும் அகல் மலையும் கடந்து ஏறி ஏழ் பகல் நீந்தி (18)

என்பது பாடல் பகுதி. இங்கே, ஆறும் காணும் அகல். மலையும் கடந்து' என்பது குறிப்பிடத் தக்கது.

ஆறு செல் படலம்

உடுபதி

பரதன் இராமனை அழைத்துவரப் போகிறான்;. எல்லாரும் புறப்படுங்கள் என்ற செய்தியைக் கேட்டதும், திங்கள் (சந்திரன்) தோன்றின் கடல் பொங்குதல் போல, நகர மக்கள் மகிழ்ச்சி எய்தினராம்:

முடுகுக என்ற சொல் முரி மாநகர்
உடுபதி வேலையின் உதயம் போன்றதே

(24)

என்பது பாடல் பகுதி. இங்கே திங்கள் உடுபதி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். உடு - விண்மீன்; பதி - கணவன்;