பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அயோத்தியா காண்ட ஆழ் கடல் () 29

இங்கே சுமந்திரன் கூறியதற்கு எதிர்மாறாக நிலைமை ஆனது. முடி சூடிக் கொள்ள விரைவாகப் போனவன் மர உரி அல்லவா அணிந்து கொண்டான்! தேவரின் வாழ்த்து

கைகேயி அழைத்ததாகச் சுமந்திரன் சொன்னதும், தெய்வப் பாடல்கள் இசைக்க, தேவர்கள் மகிழ்ந்து வாழ்த்த, பெண்கள் ஆரவாரித்து நோக்க இராமன் தேரில் சென்றான்.

தெய்வ கீதங்கள் பாடத் தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத் தையலார் இரைத்து நோக்கத் தார் அணி தேரில் சென்றான்

(86)

தேவர்களின் மகிழ்ச்சியும் வாழ்த்தும் எதிராய் மாறின அன்றோ?

வறியோர்க்கு வழங்கு

சந்தனம், மணிமாலை, நெற்றிப் பொட்டு, யானைகள், குதிரைகள், பொன் அணிகள் முதலியவற்றை இராமன் முன் கொண்டு வந்து, முடிசூட்டு மகிழ்ச்சியின் கூறாக ஏழைகட்கு வழங்குவாயாக என்றனர் பெரியவர்கள்:

சந்தம் இவை; தாவில் மணியாரம் இவை; யாவும் சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழப் பந்திகள் வயப்பரி பசும் பொனின் வெறுக்கை மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார்

(97)

மகிழ்ச்சி மேலீட்டால் வறியோர்க்கு இவற்றை யெல்லாம் வழங்கியும் மேற்கொண்டு நிலைமை. என்னாயிற்று! வளர்த்தது கைகேயி

முனிவர் முதலிய பெரியோர்கள் பின்வருமாறு பேசிக் கொள்கின்றனர்: இராமன், பெற்ற தாய் கையில் வளரவில்லை. அவனை தவப் பயனால் வளர்த்தது கைகேயியே. மகிழ்ச்சியோடு வளர்த்த கைகேயி, இராமனது