பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


 'நா'வால் நாட்டை ஆளலாம், தமிழ்ப் பண்பாட்டின் நனி நாகரிகத்திற்கு மனிதமாக நடமாடலாம், எழுத்துக்கும் பேச்சுக்கும் செயலுக்கும் அறிவு ஊற்றுக் கண்களாகத் திகழலாம். ஈரமும் - வீரமுமுடைய நல்லாட்சியை நடத்தலாம் என்பதற்கு, இலக்கிய -இலக்கணமாய் வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இடமும் இதே காஞ்சிபுரம்தான், என்று எண்ணுகிற போது, அடடாவோ... காஞ்சி மாநகர் பெற்ற பேருதான் என்னே என்று என் போன்றோர் உள்ளங்கள் எல்லாம் சிலிர்க்கின்றனவே !

இந்திய அரசியலில் புகழ்பெற்ற அரசியல்வாதிகளாகவும் இராஜதந்திரிகளாகவும், தத்துவ ஞானிகளாகவும், விளங்கியவர்கள், காஞ்சியில் வாழ்ந்த வள்ளல் பச்சையப்பர் அவர்களின்கல்விக் கோட்டத்திலே பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய அருமை பெருமைகளைப் பெற்ற திருநகரமாம் காஞ்சிபுரத்திலே அமைந்துள்ள சங்கரர் மடத்திலேதான், அருட்திரு, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உள்ளத் தாமரையில், வேதாந்த - சித்தாந்த ஞானக் கல்வி, இயற்கையாகவே மலர்ந்து மணம் பரப்பி வருவதைக் கண்டு ஆன்மீக உலகமே ஆனந்தமடைகின்றது.

தெய்விக வேட்கையுள்ளவர் வேறெதையும் நாடாது, ஞானத்தையே நாடுவார் போல ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முற்பிறவியின் தொடர்பு தொடர, இப்பிறவியிலும் சிந்தை அவிழ்ந்து சின்மயமாகச் சிறந்து சீரருளையே நாடிச் சிறப்பெய்தி வருகின்றார் எனலாம்.

வெந்து வெடிக்கின்ற வெய்யவனின் வெட்பம் வெட்கப்படுமாறு, ஞானமகான் நீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சீரடிகள், தமிழகத்தின் வீதிகளிலே பன்முறை பவனி வந்து, மக்களுக்கு அருளாட்சி வழங்கும் போது, இந்த ஆன்மிகக் காட்சியை யான் ஒருமுறை நேரில் கண்டு வியந்து வியர்ந்து அயர்ந்ததுமுண்டு.

அப்ப்பா. இந்த மாமுனிவரின் பின்னே, வந்து பொழிகின்ற மாமழை போன்ற மக்கள் வெள்ளத்தின் பிரவாகத்தைப் பார்த்து - சிந்தை சிலிர்த்தேன்.

138