பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


அந்த அரசியல் மெய்ஞானியின் குரல், நமது நாட்டு ஞான மகானின் திருநாவால், மணிவாசகங்களாக எதிரொலிப்பதைப் பார்க்கின்றோம்.

ஏனென்றால், ஒரு நாட்டில் எல்லொரும் மன்னராக இருக்க முடியாது. மனித சமுதாயத்தில் சீலமுள்ள மகான்கள் ஒரிருவர்கள் உலாவருவதே நல்லது. உயர்ந்தது, நன்மை பயப்பதுமாகும்.

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யும் மழை" எல்லாருக்கும் நலம்தானே?

அந்த நல்ல ஞான மகான்களிலே ஒருவராக ஒம்பப் படுபவர் நமது அருளாட்சி புரியும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளாவார்.

அதனால்தான் ஆன்மிக நிலமான இந்திய பூபாகத்தை அவர் ஆள்கிறார்.

"தூங்காமை, கல்வி, துணிவுடமை, - இம்மூன்றும் நீங்கா நிலனாள்பவற்கு' என்றார் திருவள்ளுவர்.

இந்தக் குறட்பா, நாட்டை ஆள்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமோ? ஆன்மிக மனங்கள் வாழ்கின்ற பூபாகத்தை ஆட்சி புரியும் அருளாளர்கட்குப் பொருந்தாவோ?

கல்வி அறிவு, காரிய நோக்கு, உள்ளத்துணிவு, இம்மூன்றும், மதநெறிகளைப் பரப்பும் மெய்ஞானிகளுக்கும் தேவைதானே?

“Dull content is unworthy of a Man"

"மந்தமான மனக்களிப்பு மனிதனை எந்த வகையிலும் இழிந்தவனாக்குகின்றது" என்ற தத்துவம் சமுதாய மக்களைச் சஞ்சலப்படுத்த வில்லையா?

அந்தத் தனி மனிதனின் மந்தமான மனக்களிப்பைப் போக்கிட - ஒர் அருளாளர், ஒரு ஞானத் தேவன் மக்களுக்கு வேண்டாமா?

அந்த ஞான மாமுனிவர் தான் நமது சுவாமிகள் என்றால், மிகையாமோ?

அறியாமை சூழ்ந்த மனித சமுதாயத்தை, குறைகள் குவிந்த குடும்ப மக்கள், ஞானக் கோலால் ஆளப் பிறந்த அருளாளராகத் தோன்றிய ஆதி சங்கரர் வாரிசுதான் - நமது ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

142