பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாரதிதாசன் பேசுகிறேன்....சுடர்விழிக் கதிரவன் படரும் உலகத்தீர்! கட்டுக் குலைந்த காரிருள். பட்டொளியால் பதுங்கிற்று.

எங்கும் இளமை - எங்கும் புதுமை - புரட்சியால் பூத்தப் புது மலர்கள் கோடி!

மிரட்சியால் ஒடும் மான்கள் இல்லை. தமிழகத்தின் வீதிகளிலே புவிநிகர் மாந்தர் கூட்டம் உலா வந்தன.

நான், விடுதலைக் கவிஞன் பாரதியாரால் உருவாக்கப்பட்டவன்,

எனது தொழில் பாடுவது -
புதிமையை நாடுவது -
சிர்திருத்தத்தோடு கூடுவது -
தமிழின்பம் தேடுவது -
அதை உண்டு ஆடுவது -
எதிர்ப்பு வந்தால் வாளெடுத்துப்
போருக்கு ஒடுவது -
வென்ற பிறகு வெற்றியை
நாட்டுக்குக் கூறுவது -
வெற்றியைப் பழித்த என்னைச் சீறுவது -
எதிரிக்கும் இறங்கி ஆறுவது -
கொண்ட கொள்கையை விட்டு
மாறுவது எனக்கு இல்லை!

179