அய்யன் திருவள்ளுவர்
அரிமா போல் அறையும் -
நின் அறை கூவல்கள்!
வேங்கைபோல் பாயும்
முன்னேற்றப் பாய்ச்சல்!
மதம் பொழியும் - தமிழ்த் திமிர் -
கவிதைச் செருக்கு!
இத்தனையும் உன்றன் ஒரு பாடலிலே
குடி புரியக் கண்டோம்!
இனி அந்த ஞான மதத்தை
யாரிடம் காண்போம் - ஐயா!
பொங்கும் தமிழ் உணர்வில்
பூரித்த தன்மானப் பூக்களைத்
தங்களது கவிதையெனும்
நறு மலர்த் தோட்டத்திலே கண்டோமே !
ஏறு போல நீ... "ஏடா தம்பி, எடடா பேனா”
என்று எமை எழுத ஏவிய போது,
வந்து விழுந்த உமது வாத வரிகளில் எல்லாம்
வரிப் புலியின் நடையைப் பார்த்தோமே !
வெல்லத் தமிழ் மட்டும் உம்முடைய
கவிதைகளில் வீச்சாக நிற்கவில்லை,
கொல்லும் தமிழ்வேல், வாள், ஈட்டிகளும்
ஓசை நயம் செய்தன ! ஓங்காரக் கூச்சலிட்டன.
மின்னல் வரிகளாக மின்னி மின்னி - எமக்கு
இருளில் நீர் காட்டிய வழியை -
எப்படி ஐயா மறப்போம்!
வேங்கையின் வாகார்ந்த உமது
வீர நடையிலே - கவிதைக் கர்ச்சனையிலே -
வெண்டைக் கவிதை எழுதிடும் சில
வெள்ளாடுகள் குறை கண்டன!
மேய்ந்த நுனிப் புல் மேடபுத்தி அவற்றுக்கு!
ஆத்திகத்திற்குப் பாதம் தூக்கும்
அந்த அடிமைகள் - உமை எதிர்த்து,
"இல்லை என்பான் யாராடா,
66