பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39


1614-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 26ம் நாள் காலை! இந்த நாள் முழுவதும், ஊர்வலமே, பெரிய நிகழ்ச்சியாக இருந்தது. ஊர் மக்களின் உள்ளத்தில் பலபுதிய நம்பிக்கை--மகிழ்ச்சி.

மறுநாள், 'போர்போன்' மாளிகையில் பேரவை கூடிற்று.

அலங்கார மேடைமீது, சிங்காதனம்--அதன்மீது வெண்பட்டாடை அணிந்து மன்னன் வீற்றிருந்தான். மேரி அம்மையும், தர்பார் பெண்களும், பரிவாரமும் மன்னருக் கருகில். மன்னன் முகத்திலே தெளிவோ, திருப்தியோ, இல்லை! இளைத்துக் களைத்து, ஏதும் புரியாத நிலையில் மன்னன் வீற்றிருந்தான்! என் செய்வான் மன்னன்1 வயது பதின்மூன்று!!

ரிஷ்லுவின் கூர்மையான கண்கள், நிலைமையைப் படம்பிடித்து விட்டன.

அறியாச் சிறுவன் அரியாசனத்தில்--அவனைக் காட்டி. அரசாளும் அம்மை, ஆனால் அதிகார மோகமிக்கவள். உல்லாசத்திற்கு அரண்மனை ஏற்ற இடம் என்பதை மட்டுமே உணர்ந்த கான்சினி, அந்த இடம் தங்களுக்கு எப்போது கிடைக்கும் என்று ஆவலுடன் இருந்த பிரபுக்கள், கருணை பிறக்கும் கஷ்டம் தீரும் என்று நம்பிக் கிடக்கும் மக்கள் மன்றத்தினர் இது பிரான்சு!-ரிஷ்லுக்குப் புரிந்துவிட்டது.

மன்னன், துவக்க உரையாற்றினான்--ஆர்வமற்று. பிறகு, இடிமுழக்கம் எழும்பின, பலரிடமிருந்து. பிரபுக்கள் சீறினர்--பாதிரிகள் பதறினர்--மக்கள் மன்றத்தினர் மன்றாடினர்- எவரும், இன்னது தேவை, இப்படி இதனை இன்னார் செய்ய வேண்டும் என்று தெளிவுபட எடுத்துக் கூறினாரில்லை. பிரபுக்களின் பேச்சிலே பதட்டம்! பூஜாரிகள் பேச்சிலே மிரட்டல்! மக்கள் குரல், தெளிவும் உறுதியும் பெறவில்லை.

முப்பெரும் பிரிவினர் ஒருவருக்கொருவர், கலந்து பேசும் நிலையிலோ ஒன்றுபட்டுத் திட்டம் தரும் திறத்திலோ இல்லை ஒருபுறம்முரசம், மற்றோர்புறம் சங்கநாதம், இன்னோர் புறம்

20140
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/39&oldid=1549021" இலிருந்து மீள்விக்கப்பட்டது