பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


தன் சொற்பொழிவை, ஏராளமான பிரதிகள் அச்சிட்டு வழங்கினான் ரிஷ்லு. பாராட்டினர் பலர், பூரித்தான். பயணம் சொல்லிக் கொண்டு, பாரிசை விட்டுப் புறப்பட்டு, லூகான் வந்து சேர்ந்தான்--தன் தேவாலயத்தைக் கவனிக்க!!

பேரவையால் ஆபத்து உடனடியாக ஏற்படாது, எனினும் பேரவையில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், தத்தமது ஊர் திரும்பியதும், தீமூட்டிவிடுவர்--எனவே பேரவையைக் கூட்டாமலிருப்பதே நல்லது என்று மேரி தேவிக்கு நண்பர் ஒருவர் கூறினார்.

அவர் எச்சரித்தது உண்மையாயிற்று. பிரான்சு முழுவதிலும், கலகவாடை வீசலாயிற்று. கூடிப்பேசிக் காரிய மேதும் ஆற்றாது கலைந்த பேரவையினர், தத்தமது மனம் போன போக்கில் ஆட்சிமுறைபற்றிக் குறை கூறியும் எதிர்ப்பு மூட்டியும் வரலாயினர்.

காண்டிபிரபு நெரித்த புருவத்துடனேயே காணப்பட்டான். அவனுக்குத் தூபமிட்டுக் கொண்டும், துதிபாடிக் கொண்டும் சீமான்கள் சிலர் இருந்தனர்.

கான்சினியோ, பேரவை கூடியும் தன்னை அசைக்கவும் முடியாமற் போனதை எண்ணிப் பெருமிதமடைந்தான்.

மேரியோ பூசலும் சிக்கலும் தீராததுடன், மேலும் வளருவது கண்டு திகைத்துக் கிடக்க நேரிட்டது.

மன்னனோ, பேரவை கலைந்ததும் தொல்லை விட்டது என்று எண்ணித் தனக்குப் பிரியமான வேட்டையில் ஈடுபடலானான். நாலு நாள், ஐந்து நாள் தொடர்ந்து வேட்டையாடி. வருவதிலே மன்னனுக்கு விருப்பம். அந்த ஒரு பொழுதுபோக்கிலேதான் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பல வண்ணப் பறவைகளைத் துரத்தித் துரத்திப் பிடிப்பதிலும், வேட்டையாடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்ட பெரும் பறவைகளைக் கொண்டு வேறுபறவைகளை வளைத்துப் பிடிப்பதும், அழகான பறவைகளைக் கொண்டு வந்து அரண்மனையிலே வளர்ப்பதும் மன்னனுக்கு மகிழ்ச்சியூட்டும் விளையாட்டு. மன்னனு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/42&oldid=1549024" இலிருந்து மீள்விக்கப்பட்டது