44
பது கூடாது, நாமே ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும், நமக்கு லைனிஸ் துணை நிற்பான் என்ற எண்ணம் மெள்ள மெள்ள மன்னன் மனதிலே உருவெடுக்கலாயிற்று.
மன்னனுடைய திருமண ஏற்பாடு மேரியின் வெற்றிகளில் ஒன்று என்று கருதப்படுகிறது.
மேரி, மெடிசி குடும்ப முறைப்படி தன் பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பதிலும், மருகனைத் தேடிக் கொடுப்பதிலும், திறமையைக் காட்டினாள்.
ஒரு மகள், ஸ்பெயின் நாட்டு இளவரசனை மணந்தாள். மற்றோர் மகள், இங்கிலாந்து நாட்டு மன்னன் மனைவியானாள்.
மூன்றாம் மகளை சவாய் அரச பரம்பரையில் திருமணம் முடித்தாள். ஆஸ்திரிய அரசிளங்குமரி ஆன், லூயிமன்னனுக்கு மனைவியாக வாய்த்தாள். இந்தத் திருமண காரியத்துக்கு, உடன் வரும்படி காண்டி பிரபுவுக்குக் கட்டளை பிறந்தது. பிரபு மறுத்து விட்டான், அழைத்ததும் உபசாரத்துக்காக அல்ல, மறுத்ததும் அரசியல் நோக்கு அற்று அல்ல! வெளிநாடு சென்று வருவதற்குள், காண்டி, பாரிஸ் புகுந்து கலகம் விளைவித்தால் என்ன செய்வது என்று எண்ணிய மேரி காண்டி பிரபுவை, தன் பரிவாரத்துடன் அழைத்துச் சென்றால், பயமற்றிருக்கலாம் என்ற எண்ணத்தால், அழைப்பு அனுப்பினாள்- பிரபுவும் இந்தச் சூட்சமம் அறிந்தே உடன்வர மறுத்தான். இதனால் இரு தரப்பினருக்கும் சிறு சமர் மூண்டது. வெற்றி தோல்வியின்றி, சமர் சாய்ந்தது.
இந்நிலையில் பாரிஸ் இருந்து வந்தது-ரிஷ்லு எதிர்பார்த்த நேரம் வரவில்லை.
காண்டி பிரபுவுக்குப் பல சலுகைகள் காட்டி, மேரி, சமரசம் உண்டாக்கினாள்-பிரபுவும், அரச காரியத்தை உடனிருந்து கவனிக்க அரண்மனை சென்றான்.
மேரி அம்மையின் தயவு பெற ஒருபுறம் பலமான முயற்சி, கான்சினியின் ஆதரவு தேடி வேறோர்புறம் முயற்சி,