பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53


வேண்டும் என்பதற்காகக் கற்றானே தவிர, அறத்தைப் பரப்ப வேண்டும், காக்க வேண்டும் என்பதற்காக அல்ல! அந்த வேலையைப் புத்தகப் பூச்சிகளுக்கும் வித்தகப் பேச்சாளருக்கும் விட்டு விட்டான்!

அரண்மனை ஆச்சரியப்பட்டது பலரை வீழ்த்திய பெரும் புயலால், ரிஷ்லு சாய்ந்திடாதது கண்டு. மேரியிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட்டதுடன் அம்மையைப் பாரிசை விட்டே பயணப்படும்படி மன்னன் உத்தரவிட்டான்--உத்தரவு பிறப்பிக்கும்படி லைனிஸ் கட்டளையிட்டான்!

ப்ளாயிஸ் என்ற ஊர் சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு மேரி புறப்பட்டபோது, மன்னனுடைய அனுமதியுடன், ரிஷ்லு, மேரியின் ஆலோசகர் குழுத் தலைவராகச் சென்றான்.

மேரி, சுகத்திலும் துக்கத்திலும் வாழ்விலும் தாழ்விலும் தன்னுடன் இணைந்து இருக்க இசையும் ரிஷ்லுவின் பெருங்குணத்தைப் பாராட்டி இருக்கக் கூடும். ஆனால் ரிஷ்லு சென்றது, மேரி அம்மையுடன் இருந்துகொண்டு, மன்னனுக்கு அவ்வப்போது 'சேதி' அனுப்ப! லைனிசின் ஏற்பாட்டின் படி ஆட்சிப் பொறுப்பை மன்னன் ஏற்றுக்கொண்ட கணமே, ரிஷ்லு, மன்னனின் 'ஆள்' ஆகிவிட்டான். மேரி இனி ஒரு கருவி --அதிலும் கூர் மழுங்கிவிட்டது! உயர வழி, முன்னேற மார்க்கம் மீண்டும் உயர் பதவி பெற வழி, மன்னனுக்குத் தொண்டு புரிவதுதான் என்ற முடிவுக்கு ரிஷ்லு வந்தாகிவிட்டது. மன்னனால் நியமிக்கப்பட்ட 'ஒற்றன்' இந்த ரிஷ்லு என்று அறியாமல், இழந்ததைத் திருப்பிப்பெறத் திட்டம் என்ன வகுக்கலாம் என்று எண்ணியபடி, ரிஷ்லுவை அழைத்துக்கொண்டு, மேரி, ப்ளாயிஸ் சென்று புதுமுகாம் அமைத்துக்கொண்டாள்.

மேரியுடன் ரிஷ்லு இருந்து வந்தது லைனிசுக்குப் பிடிக்கவில்லை. எனவே ரிஷ்லு, பழையபடி லூகான் நகர் அனுப்பப்பட்டான். ஏழாண்டுகள் இதுபோல, 'வனவாசம்' செய்ய நேரிட்டது. பலர் ரிஷ்லுவின் அரசியல் வாழ்வு இனித்துலங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/53&oldid=1549035" இலிருந்து மீள்விக்கப்பட்டது