பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


காது என்று எண்ணினர், ஆனால் ரிஷ்லுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது மீண்டும் பதவிகிடைத்தே தீரும், முன்னிலும் மேலான நிலை பிறக்கும் என்று.

'நான் உண்டு என் ஏடு உண்டு' என்று ரிஷ்லு கூறிக் கொண்ட போதிலும், நாட்டு நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த வண்ணம்தான் இருந்தான். இடையிடையே, எந்த மன்னனால் துரத்தப்பட்டானோ, அதே லூயி மன்னனுக்கு, ரிஷ்லு தன் ஆற்றலை விளக்கிக்காட்டும் வாய்ப்பும் கிடைத்தது.

லூகான் நகர் சென்றதும் ரிஷ்லு, தன் புகழ் மங்கி விடும்படி இருந்துவிடவில்லை - புகழ் துருப்பிடிக்கவும் கூடாது, அரசாள்வோர் கவனத்தைக் ஈர்க்கத்தவறவும் கூடாது என்பது ரிஷ்லுவுக்கு நன்றாகத் தெரியும்.

பிராடெஸ்ட்டென்ட் கொள்கைகளைக் கண்டித்தும், கத்தோலிக்கக் கோட்பாடுகளை ஆதரித்தும் அரியதோர் ஏடு தீட்டினான் - மார்க்கத் துறையினர் கண்டு பாராட்டும் வகையில்! புகழ் பரவலாயிற்று! மன்றம் புல பேசலாயின, ரிஷ்லுவின் நுண்ணறிவு பற்றி. கத்தோலிக்க மார்க்கத்தை உலகெங்கும் பரப்பி, எதிர்ப்புக்களை ஒழித்துக் கட்டும் பேராற்றல் படைத்தவர் இந்த ரிஷ்லு என்று கொண்டாடினர். சிலர், மார்க்கத் துறையிலே ஈடுபட்டு மானிலம் புகழும் இடம் பெறுவதை விட்டு, ஏன் இவர் சிலகாலம் அரசியல் சேற்றிலே உழன்று கிடந்தார் என்று பேசினர். ரிஷ்லுவுக்கு இந்த வெற்றி களிப்பளித்தது. நாடு நம்மை மறந்துவிடவில்லை!புகழ்கிறது! கவனத்தில் வைத்திருக்சிறது-என்று எண்ணி மகிழ்ந்தான்.

கத்தோலிக்கக் கோட்பாட்டுக்கு பிராடெஸ்ட்டென்ட் புயலால் ஏற்பட்ட ஊறுகளைப் போக்கவேண்டும் என்பதல்ல, ரிஷ்லுவின் எண்ணம். ஆட்சிப் பொறுப்பு அளிக்கப்படவில்லை, ஆற்றலைக் காட்டியபடி இருந்தால், அந்த வாய்ப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/54&oldid=1549036" இலிருந்து மீள்விக்கப்பட்டது