பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


உறவினர்களுக்கெல்லாம் செல்வம், செல்வாக்கு, பட்டம் பதவி ! அள்ளி அள்ளி வீசினான், லைனிஸ்; கேட்க நாதி இல்லை. எதிர்த்திடத் துணிந்தவர்கள் அழிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மேரி அம்மை, ப்ளாயிசில் சோம்பிக்கிடந்து பயனில்லை அங்கிருந்து வெளிஏறி, பிரபுக்கள் சிலரின் உதவியைத் திரட்டிக் கொண்டு, லைனிசை எதிர்த்தொழித்து, மகனை மீட்டு அவனை மன்னனாகக் கொண்டு பழையபடி தன் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும், என்று தீர்மானித்தாள். எபர்னான் பிரபுவுக்கு அதுபோது பிரான்சிலே நல்லசெல்வாக்கு, அவருடைய உதவியைப்பெற, மேரி திட்டமிட்டு மங்கலான நிலவொளி இருந்த ஓரிரவு, சாளர வழியாக நூலேணி போட்டுக் கீழே இறங்கிப்ப்ளாயிஸ் மாளிகையை விட்டு வெளி யேறி, எபர்னான் மாளிகை வந்து சேர்ந்தாள்.

மேரி தப்பிச்சென்ற செய்தி பிரான்சிலே பெரிய பரப்பை உண்டாக்கிவிட்டது. இரவில் ! சாளரவழி! நூலேணி!!--மக்கள் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு வியப்படைந்தனர். எபர்னான் பிரபு, மேரி அம்மைக்குத் துணை புரியச் சம்மதித்தார்--லைனிசினிடம் வெறுப்புக் கொண்ட வேறு சீமான்களும் பக்கத்துணையாயினர்! மேரி அம்மையின் திட்டம் வெற்றி தந்துவிடும் என்ற நம்பிக்கை உதயமாயிற்று.

மன்னனும் லைனசும் கவலைப்பட்டனர்--எப்படி இந்த ஆபத்தைத் தவிர்ப்பது என்று யோசித்தனர்--ஜோசப் யோசனை கூறினார், "மேரி, படையுடன் பாரிஸ் வராதபடி தடுக்கக் கூடியவர் ஒருவர் தான் உண்டு- அவர்தான் ரிஷ்லு!" என்றார். ரிஷ்லு அழைக்கப்பட்டார்! என்னைப் பாரிசை விட்டுத் துரத்தினீர்களே, நான் ஏன் உங்களுக்குத் துணை புரிய வேண்டும்? நான்,மேரி அம்மைக்கே உதவி புரிவேன் மேரியின் தயவுதான் எனக்கு அரண்மனைக்கு நுழைவுச் சீட்டாக இருந்தது. எனவே நான் பாரிஸ் வாரேன்" என்றல்லவா, ரிஷ்லு நிலையில் தள்ளப்பட்ட எவரும் கூறுவர். ரிஷ்லு பாரிஸ் சென்றான், மேரி அம்மைக்கும் மன்னனுக்கும் சமரசம் உண்டாக்கி வைக்கும் பணியைச் செய்து முடிப்ப-

அ--4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/57&oldid=1549039" இலிருந்து மீள்விக்கப்பட்டது