60
ஆயிரத்தெட்டுக் கேடுகள் நடமாடும் இடம் என்று மிரண்டு ஓடிவிடவில்லை. அம்மைக்கு அவ்விதமான மயக்கம் இருப்பதும் நல்லது தான், அதனை எப்படி, ஆதிக்கம் பெறப் பயன்படுத்திக் கொள்வது, என்று மட்டுமே எண்ணினான்,
"நான் இருக்கிறேன்! இதோ! உன் எதிரில்! எப்போதும்!" என்று தன்னைக் காட்டிக் கொள்வது மட்டும் போதும். இணங்கி விடுவது கூடாது, ஆவல் மட்டும் இருக்கட்டும், அது அணையா தீபமாக இருக்கட்டும், என்று எண்ணி ரிஷ்லு நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ரிஷ்லுவின் போக்கைக் கவனிக்கும் போது, இது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று தள்ளிவிடுவதற்கில்லை.
இப்படி ஒரு மயக்கம் இருந்தாலொழிய,மேரி அம்மை, நெருக்கடியான நேரத்தில் எல்லாம், ரிஷ்லுவின் பேச்சுக்கு ஏற்றபடி தன் திட்டத்தைத் திருத்திக் கொள்வதற்குக் காரணம் வேறும் காணக்கிடைக்கவில்லை.
எப்படியோ ஒன்று, சமரசம் ஏற்பட்டு விட்டது. தாயும் மகனும் அளவளாவினர்-நாடு ஓரளவு நிம்மதி கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்தது.
ரிஷ்லுவுக்கு இதனால் என்ன இலாபம்? இல்லாமற்போகுமா? கார்டினல் எனும், உயர்தர மத அதிபர் பதவியை ரிஷ்லுவுக்கு போப்பாண்டவர் அளித்தார். இந்தப் பதவியில் ரிஷ்லுவை அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது!
கார்டினல் எனும் நிலைபெற, மார்க்கத் துறையிலேயே பன்னெடுங்காலம் ஈடுபட்டுக் காத்துக் கிடப்பர் பலர்; ஆனால் ரிஷ்லுவுக்கோ! ஒரு அரசியல் குழப்பம்-சமரச முயற்சி கார்டினல் பதவி!
எபர்னான் பிரபுவின் பேருதவியை நம்பித்தான் மேரி, மன்னனை எதிர்க்கத் துணிந்தது. ரிஷ்லு எப்படியோ அம்-