பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

கிறது, பள்ளம் இருக்கிறது, தொழில் இருக்கிறது துயரம் இருக்கிறது......இந்த நாட்டுக்காக அல்ல, 'அரசாண்ட ஆண்டி' திட்டமிட்டது!

அரசாண்ட ஆண்டியின் பிரான்சு மன்னன், அவனைச் சுற்றி வட்டமிடும் வல்லூறுகள், அவனுடைய விளையாட்டுக்காகப் பறந்திடும் பொன் வண்டுகள், இவை உள்ள அரண்மனை, மாளிகை, பூம்பொழில் -- இந்த ஏற்பாட்டைப் பாதுகாக்க அமைந்துள்ள பாசறை, நீதிமன்றம், சிறைக்கூடம் இவை?

மன்னனுடைய மணிமுடி ஒளிவிட, ஏழையின் இரத்தத்தை 'அபிஷேகம் ' செய்தான் அரசாண்ட ஆண்டி.

மக்கள் பதிலளிக்க நெடுங்காலம் பிடித்தது. அவர்கள் தந்த பதிலோ, பயங்கரமானது; மன்னனின் தலையை வெட்டிக்காட்டி, முழக்கமிட்டனர் மக்களுக்காக! பிரான்சுக்காக! என்று.

இதயம் இரும்பானால் எனும் மற்றோர் ஏடு, இதனை விளக்கிடும். இது நாட்டுக்காக என்று கூறிக்கொண்டு, அரசாண்ட ஆண்டி பற்றியது.

வெளி உலகத்துடன் தொடர்புகள் துரிதமாகவும் அதிக அளவிலும் வளர்ந்துகொண்டு வரும் இந்நாட்களில் பல்வேறு நாடுகளிலே இருந்த நிலைமைகள் நடைபெற்ற நிகழ்ச்சிகள் என்பவைகளை, நமது மக்கள் அறிந்தாக வேண்டும்.

அதற்கான ஆர்வத்தை எழச்செய்யவே, இதனை வெளியிடுகிறேன்.

வரலாறு--பள்ளிக்கூடத்திலே மட்டுமே இருக்க வேண்டிய ஏடு என்று எண்ணற்க! மக்களாட்சி நடைபெறும் நாட்களில் வரலாறு ஒவ்வொருவர் கருத்திலேயும் தெளிவையும் துணிவையும் தரத் துணை செய்யும் நூலாகக் கொண்டிடல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/7&oldid=1548996" இலிருந்து மீள்விக்கப்பட்டது