பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


அரசாண்ட ஆண்டி என் கைவண்ணத்தைக் காட்டிடத் தீட்டியதல்ல, மக்கள் கருத்திலே தெளிவும் துணிவும் இல்லாமற் போனால், ஆட்சி எக்கேடு கெடும் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு எச்சரிக்கை.

அரசாண்ட ஆண்டி ஏதோ ஒரு வெளிநாட்டு விவகாரம் என்று எண்ணிவிடக் கூடாது-வரலாறு என்பது ஒரு பொதுநூல் - சூழ்நிலை விளக்கம், விளைவு பற்றிய பாடம் பெறத்தக்கஏடு, வரலாறு.

அரசாண்ட ஆண்டி எங்கும் கிளம்பலாம்! எப்போது வேண்டுமாயினும்!! மக்களின் விழிப்பற்ற நிலை எங்குஎப்போது காணப்பட்டாலும், அங்கு அவன்! ஆமாம்!

அரசாண்ட ஆண்டி இருந்த மட்டும், எதிர்த்திடக்கூட இயலவில்லை; மன்னனால்! பிரபுக்களால் ! அருளாலயத்தினர்கூட!!

அரசாண்ட ஆண்டி, செய்த கொடுமைகள் யாவற்றுக்கும்கூறிய ஒரே விளக்கம்-எதுவும் எனக்காக அல்ல ! அரசுக்காக! நாட்டுக்காக! என்பதுதான்!

அரசாண்ட ஆண்டி அரசுக்காக ; பிரான்சுக்காக; என்ற சொற்களைத் திறம்படப் பயன்படுத்தி கொடுமைகளை கூசாமல் செய்து ஆதிக்க வெறியனாய் வாழ்ந்து பெரும் பொருள் தேடிக்கொண்டான்.

அரசாண்ட ஆண்டி போல ஆளவந்தார்கள் எவராயினும், தமது போக்குக்குக் காரணமாக, அரசுக்காக; நாட்டுக்காக! என்ற சொற்களை உச்சரிக்கக் கூடும். மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்.

அரசாண்ட ஆண்டி அரசுக்காக! நாட்டுக்காக! என்ற சொற்களை மந்திரமாக்கி மக்களை மயக்கினான். அரண்மனை, மாளிகை, ஆலயம் இவற்றோடு நாடு முடிந்துவிடவில்லை. வயல் இருக்கிறது, வாய்க்கால் இருக்கிறது, பாதை இருக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/6&oldid=1548995" இலிருந்து மீள்விக்கப்பட்டது