76
காதுகள்! எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்ற அச்சம்; எனவே ரிஷ்லு, ஆயுதம் தரித்த காவலாட்களின்றி வெளியே செல்வதில்லை. எந்த மாளிகையிலே பேசப்படும் விஷயமும், ரிஷ்லுவுக்கு எட்டிவிடும். எனவே, முன்னேற்பாடுகள் செய்வது எளிதாகவும் வெற்றிகரமாகவும் முடிந்தது. இவைகளுக்காகப் பெரும் செலவு--அரசாங்கப் பணத்திலிருந்து. அரசுக்காக! பிரான்சுக்காக! என்ற
மந்திரச் சொல்லைக் கூறியபடி, மட்டற்ற கொடுமைகளைச் செய்துவந்த ரிஷ்லு, அரசனையும் மிஞ்சக்கூடிய செல்வம் சேகரித்துக் கொண்டான், ஏழை கோயிலுக்குப் பூஜாரியாக இருந்து வந்த ரிஷ்லுவிடம் ஏராளமான செல்வம், இணையற்ற
மாளிகை, ஆடம்பரமான வண்டி வாகனங்கள், காலாட்படை குதிரைப்படை? பாடகர்கள்! பணியாட்கள்! உறவினர்களுக்கு உயர் பதவி தரக் கூசவில்லை. ஊரார் பார்த்து, இவ்வளவு செல்வம் எப்படிக் கிடைத்தது என்று கேட்பார்களே என்று
எண்ணவுமில்லை. பொன் அவன் காலடியிலே வந்து வீழ்ந்தது! நாடோ, ஏழ்மைப் படுகுழியிலேயே இருந்தது.
பாரிஸ் நகரிலேயே நிகரற்ற அழகி என்று புகழப்பட்ட ஹாடிபோர்ட் என்பாளிடமானாலும், அவளிடம் மனத்தாங்கல் கொண்டபோது கிடைத்த பாயேடி என்பவளானாலும், எந்த மங்கையிடமும், மன்னன் பழகியது இந்த முறையிலேதான். ரிஷ்லுவுக்கு இதிலே மிகுந்த திருப்தி. கெண்டை விழிமாதரிடம் மன்னன் மற்றவர்கள் போலப் பழகிவிட்டால், ஆபத்தல்லவா!
மன்னன் சிரித்தால்; உடன் சிரிக்கவேண்டும், சோகமாக இருந்தால் சோகமடையவேண்டும், பேசுவதைக் கேட்டுக்கொள்ளவேண்டும், ஆர்வம் அதிகமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும்--இவ்வளவுதான் மன்னன் தன்னுடன் பழகிய பாவையரிடம் விரும்பியது.
இந்த ஹாடிபோர்ட், பாயேடி, எனும் இருவருமே, ரிஷ்லுவின் போக்கை உணர்ந்தனர்- வெறுத்தனர். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே, ரிஷ்லுதான் வெறுப்பை மூட்டி