இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரசாண்ட ஆண்டி
“லாரோகேல். கோட்டைக் கோமகள், கோமளவல்லி, இளமையும் எழிலும் ததும்பும் இன்பவல்லி.........தெரியுமே, மன்னா! தங்கட்கு......... நினைவில்லையோ?”
“அவளா அமைச்சரே ! அழகி. ஆமாம், நினைவிலிருக்கிறது- எவர் நெஞ்சிலும் பதியும் ஓவியம்! விதவை, அல்லவா?”
- “ஆமாம் அரசே? விதவை! விருந்தாக வேண்டியவள்.”
"கோலாகல வாழ்க்கையை வெறுப்பவள் போலும் அந்த வனிதாமணி. நமது கொலுமண்டபத்துக்கு வரத் தயங்கும் காரணம், வேறென்னவாக இருக்கமுடியும்,'”
"விழிமட்டுமல்ல, மன்னா! மங்கையின் சுபாவமே. மானுக்குள்ளது போன்றதே. ஒரு வகையான கூச்சம், அத்தகு ஆரணங்குகளிடம், பழகிவிட்டால், தொட்டால்