பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


துவள்வதுகளிடம் கிடைக்கொணாத இன்பம் பிறக்கும். அவள் தங்கள் அவைக்குத் தேவையான உயிரோவியம். இந்த இடத்தின் அழகு, அவளால் வளரும், மிளிரும். பூந்தோட்டத் தில்தானே பூபதி! புள்ளிக்கலாப மயில் தோகையை விரித்தாடிட வேண்டும், பொட்டலிலா! லாரோகேல் கோட்டையின் ரமணி, தங்கள் பார்வையில் இருக்க வேண்டிய பாவை. மேலும், இங்கு இளித்துக் கிடக்கும் நங்கைகள் தங்கள் மனதிலே ஓர் சோர்வை உண்டாக்கி விட்டனர். உணர்கிறேன் மன்னா, உணர்கிறேன். அந்த உல்லாசி இங்கு உலவினாலே போதும், தென்றலின் இனிமை கிடைக்கும்.

"அமைச்சரே! அவள்தான் இங்கு வர மறுக்கிறாளே!

"மறுத்தால் என்ன! அவள் இங்கு வராவிட்டால் நாம், அங்கு போவது!!"

"நாமா!"

"ஆமாம்! இப்படி அல்ல; மாறுவேடத்தில்"

"வேடிக்கையாக இருக்கும்"

"மனதுக்குப் புதுவிதமான இன்பம் இறையே!"

"எனக்கும் கூட ஒரே சலிப்புத்தான்! கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன கீதங்கள்! கண்டு சலித்துப் போன நடனங்கள்! ஒய்யாரிகளின் சிரிப்பு. காதைக் குடைகிறது, புன்னகை பூத்த முகத்தழகி இல்லை - எங்கும் ஒரே சாயப் பூச்சு........"

"அதை உணர்ந்துதான், அரசே! லாரோகேல் கோட்டைக் கோமகளைத் தங்களுக்குக் காணிக்கையாக்கியே தீருவது என்று தீர்மானித்தேன்--திட்டமும் தயாராகிவிட்டது"

"திட்டம் தீட்டுவதிலே, உமக்குள்ள திறமையை அறியாத அரசுகள் உண்டோ, அமைச்சரே! ஆனால் நமக்குள் பேசிக்கொள்வோம். இந்த ரசவல்லிகளின் சம்பந்தமான திட்டம் தீட்டுவதிலும் வல்லமை மிக்கவர் தாங்கள், என்பது எவருக்கும் தெரியாதல்லவா! நம்பக்கூட மாட்டார்கள்!!"

"ஆண்டிதானே, மன்னவா! ஆண்டிக்கு என்ன தெரியும், அழகிகளைப்பற்றி என்றுதான் கூறுவர்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/10&oldid=1548999" இலிருந்து மீள்விக்கப்பட்டது