பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


"சூட்சமம் தெரியாதவர்கள்!"

"சென்று, சில ஏற்பாடுகள் செய்துவிட்டு வருகிறேன். நாளை, பயணம்"

"புதிய போர்! அமைச்சரே! பொற்கொடியைப் பெற நடத்தப்பட இருக்கும் புனிதப் போர்!"

"எத்தலைய போர் எனினும், மன்னன் வெற்றிக்கே பாடுபடுவேன்"

"உம் உதவி இருக்குமட்டும், வெற்றிக்கு, என்ன குறை!! சென்று வாரும்! என் மனம், இப்போதே கோட்டையில் இருக்கிறது"

"கோமள வல்லியின் கொஞ்சு மொழி என் செவியில் கேட்கிறது, மன்னவா! சென்று வருகிறேன்

ரண்மனையில், அந்தரங்க அறையில், அரசனுக்கும் அமைச்சருக்கும் இங்ஙனம் உரையாடல்! மன்னன் காமாந்தகாரனல்ல - அமைச்சரோ ஆண்டிக்கோலத்தில் இருக்கிறார்- காமக் களியாட்டத்திலே துளியும் ஈடுபாடற்றவர்; எனினும், மன்னன் மனதுக்கு மகிழ்ச்சி தரத்தக்க மங்கை நல்லாளைக் கண்டறிந்து கூறுகிறார், கண்ட கண்ட கட்டழகிகளுடன், காமக் கூத்தாடித் திரியும் மன்னனுமல்ல-வண்டு மொய்க்கா மலர்கள் மணத்தைப் பரப்பிக் கொண்டிருக்க, பசுமைநிரம்பிய தோட்டத்திலே, அந்த பலவண்ண மலர்கள் உள்ள நேர்த்தியைக் கண்டு களிப்படையும் ரசிகன்போல், மன்னன் ஆடிடும் அணங்குகளையும், பாடிடும்பதுமைகளையும், நடைகாட்டி, இடைஅசைத்து, நடையை நாட்டியமாக்கிடும் நாரிமணிகளையும், கண்டுகளிப்பதன் -- ஆடி அலையும் ஆசைமிக்கோனுமல்ல. மன்னனுடைய சபலம், அமைச்சருக்குத் தெரியும் - அதனைப் போக்கும் 'மாமருந்து' தேடிடும் முறையும், கடமையிலே ஒன்றெனக்கொண்டார். திருத்தலாகாதோ, மன்னனை? திருத்தலாம் -- திருந்தவும்கூடும்--எனினும், திருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/11&oldid=1549000" இலிருந்து மீள்விக்கப்பட்டது