பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


திப் பயன்? மன்னனுக்குப் பொழுதுபோக்கு இருக்கவேண்டும் -அப்போதுதான், அரசகாரியங்களைக் கவனித்துக்கொள்ளும் நிலை அமைச்சருக்குக் கிடைக்கும். ஆகவே, 'சபலம்' இருந்தால் தவறில்லை! ஆனால், அதை அறிந்து, வேறு தர்பார் தளுக்கன் எவனாவது, அரசனுக்குத் துணை நின்று ‘கைக்குள் போட்டுக்கொண்டால்? அமைச்சரின் ஆதிக்கத்துக்கேகூட ஆபத்து எழக்கூடுமல்லவா! எனவே, மன்னனுக்குத் தேவையான 'பொன்வண்டு' சேகரிக்கும் காரியத்தையும் தானே கவனித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

அமைச்சனின் எண்ணம் இது. அப்பழுக்கற்றவர், பெண்கள் விஷயத்தில். பக்தர்! சித்தத்தில் சத்தற்ற விஷயங்களுக்குச் சிறிதளவும் இடம் தராதவர்! அமைச்சராக மட்டுமல்ல, ஆண்டவன் அருளைப் பாமரருக்குப் பெற்றுத்தரும் திருக்கூட்டத்தவரிலே, முன்னணிப் படையிலே, முக்கியமானவராகவும் உள்ளவர். எனினும், மன்னனிடம் தமக்கு உள்ள தொடர்பும் செல்வாக்கும், எவராலும் சிதைந்திடாதபடி பாதுகாத்துக்கொள்வதற்காக, 'முறையற்ற' செயலையும், மனமுவந்து மேற்கொண்டார்! எந்த நாட்டில் என்கிறீர்களா? வேல்விழி மாதரிடம், கோலோச்சும் மன்னர்கள் அடிமைப்பட்டுக் கிடந்த போக பூமியில்! பாருக்குள்ளே ஒரு நாடு, பல ரசங்கள் பெருகிய நாடு. பிரான்சு.

"நடிப்பா இது"!

"ரசிகர்கள் ஏராளம், எனக்கு"

"அவர்கள் ரசிகர்களா! அப்பா நடிகா! அதிகம் பேசுவானேன். நாகரிக நகரங்களில் நமது நாடகக் குழுபோன்ற உயர்தர மேடையில், உன் போன்றவர்களுக்கு இடம் கிடைக்காது--வருந்திப் பயனில்லை--கோபம் என்றால், பற்களை நற நறவெனக் கடிக்கிறாய்--கிராம மக்கள் 'கரகோஷம்' செய்வர். நிச்சயமாக! இது, பாரிஸ்/ நாகரீக நளினிகளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/12&oldid=1549001" இலிருந்து மீள்விக்கப்பட்டது