பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


அவர்களின் நகைமுகம் காண நவநிதியும் தரச் சித்தமாக உள்ள பிரபுக்களும் கலையை வளர்க்கும் கூடம். கோபம் என்றால், பற்களை நறநறவெனக் கடித்துக்காட்டினால், பட்டிக்காட்டான் என்று கூறிக் கேலி செய்வர். புருவத்தை நெறிப்பது, அதேபோது, புன்சிரிப்பை இழந்திடாமல் இருப்பது-அது பாரிஸ் போற்றும் கலை. போ! போ! ஆண்டுபல பயிற்சி பெற்றபின், வா, பார்ப்போம்'"

"சிறு பாகமும் ஏற்று நடிக்கத் தயார்..."

"நீ தயாரப்பா, நீ தயார்; ஆனால், நான்? என் கலா ரசிகர்கள்? சிறு பாகம் எனினும், இங்கு, என் அரங்கில், நடிப்பிலே நேர்த்தியான திறமை உள்ளவருக்கே அளிக்கப்படும். விவாதம் கூடாது, என்னிடம்! சென்று வா"

வேலை தேடிவந்த ஆர்வமுள்ள நடிகனை, நாடகக்கலை வியாபாரி விரட்டிவிட்டு, உயர்ரகப் பானத்தைப் பருகிக்கொண்டிருந்தான்; உள்ளே நுழைந்தார், ஓர் முதியவர்.

"வருக, அமருக! ஊர் பேர் விவரம் கூறுக" என்றான் கலைவாணிபன்--முதியவர் நகைத்தார்--கூர்ந்து நோக்கினான் கலைக்கூடக் கள்ளன் கண்டுகொண்டான் அவர் யார் என்பதை, குழைந்தான்; நெளிந்தான்; கரம் கூப்பினான். பெரியவர், அவனை அமரச் சொல்லிவிட்டு, அருகே ஓர் ஆசனத்திலமர்ந்து, "அச்சம் கண்களில் தெரியவேண்டும், ஆனால் ஒரு கணம்தான்-அடுத்த கணமோ பாசத்தைப் பொழியவேண்டும்; சிங்காரம் சிறப்புற இருக்கவேண்டும். எனினும் செருக்குத் தெரிதல் கூடாது; வழுக்கி விழுபவளாகத் தெரியக்கூடாது, எனினும் காதலை ரசிக்கவே தெரியாத கற்சிலைபோன்றும் இருந்துவிடக்கூடாது; பேச்சிலே 'லலிதம்' இருக்கவேண்டும், ஆள்மயக்கி என்று தெரிந்து விடக்கூடாது; மன்னர்களை மகிழ்விக்க இயலும் என்ற முறையில் உபசாரம் செய்யு ஆற்றலிருக்கவேண்டும், ஆனால், இப்படிப்பட்ட வாய்ப்புக் கிட்டிவிட்டதே, என் பாக்கியமே பாக்கியம் என்று களிப்புடன் குளறிடுதல் கூடாது; மணிமண்டபத்திலே, சிற்பி சமைத்த ஓவியம் உயிர்பெற்று எழுந்து வந்து, தன்னைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/13&oldid=1549002" இலிருந்து மீள்விக்கப்பட்டது