பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14


கண்டு பூரித்து நிற்கும் ரசிகனிடம், காதலைப் பொழிவதைப்போல்! இத்தகைய நடிப்புத் திறன் உள்ள பெண், உண்டா; இங்கு; இப்போது; உம்மிடம்?

"அமைச்சர் பெருமானே! பயிற்சி தந்திருக்கிறேன், எத்தகைய பாகமும் ஏற்று நடிக்கப் பாவை ஒருவள், பக்குவமானவள், இதுபோது இருக்கிறாள். தாங்கள் கூறும் பாகத்தை நடிக்கும் திறம் படைத்தவள். எங்கு நாடகம்? எப்போது?"

"நாளை மறுநாள்! மன்னன் முன்! கொட்டகையில் அல்ல, கோட்டை மாளிகையில்'

"மன்னன் முன்னிலையிலா! மெத்த மகிழ்ச்சி! அமைச்சர் பெரும! மெத்த மகிழ்ச்சி! அரசரின் அருமை நண்பர்கள் அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைத்துக் காட்டுகிறேன். என் திறத்தை விளக்கிட நல்லதோர் வாய்ப்பு, நல்லதோர் வாய்ப்பு"

"ஆசிரிய! கோட்டை மாளிகையில் என்றேன், நாடகம் என்று கூறவில்லை. லாரோகேல் கோட்டைக் கோமகளாக மாறுவேடம் அணிந்து, சில நாட்கள், மன்னனுடன், அந்த நடிகை அளவளாவி இருக்கவேண்டும். கோட்டை மாளிகையில், ஆள் அம்பு, ஆடம்பரம் அலங்காரம் யாவும் இன்று தயாராகிவிடும்; அவர்கள் அனைவரும், உன் நடிகையை கோட்டைக் கோமகளாகவே வரவேற்பர்--பணிபுரிபவர், மன்னன் வருவார்-உடன் நான் வருவேன்--இருவரும் மாறு வேடத்தில்!"

"புதுமையாக இருக்கிறது"

"பொருள் உண்டு--உனக்கு அது தெரியவேண்டியதில்லை. இதோ இப்பேழையில், கோட்டைக் கோமகளுக்குரிய ஆபரண வகைகள்--மற்றோர் பேழையில் ஆடை வகைகள். இதோ அவள் ஓவியம். இன்றே உன் நடிகையைத் தயார் செய்து, இரவு அங்கு சென்றுவிட ஏற்பாடு செய். என் ஆட்கள் அங்கு தயாராக இருப்பர். மன்னன், லாரோகேல் கோட்டைக் கோமகளிடம் பழகுவதாகவே, கருத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/14&oldid=1549003" இலிருந்து மீள்விக்கப்பட்டது