பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


வேண்டும்--துளியும் சந்தேகம் ஏற்படலாகாது-குட்டு. வெளிப்பட்டால், தலைதப்பாது, உனக்கு."

"கஷ்டமும் ஆபத்தும் நிரம்பிய திட்டம்"

"மன்னனுக்காக ! அரசுக்காக! நாட்டுக்காக! காமவேட்டைக்கு அல்ல! கருத்தற்ற களியாட்டமுமல்ல!"

"முயல்கிறேன்........."

வெற்றி கிட்டும், அஞ்சாதே! மன்னர் தாமாகத் தம்மை. இன்னார் என்று தெரிவிக்காமுன்னம், கோட்டைக் கோமகள் அவர்தான் மன்னர் என்று அறிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்ளக்கூடாது."

"அப்படியா? ஏன்?”

"எப்படி இதைச் சாதிப்பது என்று யோசி--ஏனென்ற கேள்வி எதற்கு!

"உத்தரவு"

"இதோ செலவுத் தொகை..... லாரோகேல் மாளிகையில் கோட்டைக் கோமகளை, நாளை மறுநாள் சந்திக்கிறேன்."

"நாம் யார் என்று அறிந்ததும் பேதைப்பெண் பிரமித்துப் போய் விடுவாள்! மன்னா! மன்னித்துவிடு--குற்றம் ஏதேனும் செய்திருந்தால், பொறுத்திடுக! என்றெல்லாம், குளறிக் கொட்டுவாள்.

"ஆமாம், அரசே! மாறுவேடம் தங்களுக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது. நடிப்பது தங்கட்குத் தெரியாதா--சீமாட்டி அறிய முடியுமா தங்கள் திறமையை’"

"வேடிக்கையாக இருக்கும். யாரோ, காதலில் கட்டுண்ட வாலிபன், என்று எண்ணிக்கொள்வாள்-- இன்னுயிரே! ஆரமுதே! என்று நான் கொஞ்சுமொழி பேசுவது கேட்டு, யாரோ, சிங்காரத் தோட்டத்தில் நள்ளிரவுகளைக் கழித்த வாலிபச் சீமான் என்று எண்ணிக் கொள்வாள்......"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/15&oldid=1549004" இலிருந்து மீள்விக்கப்பட்டது