பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


"ரோப்பா மெச்சும் பிரான்சு நாட்டுப்பூபதி தாங்கள் என்பதை பிறகு அறிந்ததும்....."

அப்போதுதானே, வேடிக்கையின் உச்சக்கட்டம். அமைச்சரே, ஒரு திங்களுக்கு மேலாக எனக்கு இருந்து வந்த சோர்வு, சலிப்பு, பறந்தே போய் விட்டது--புதியதோர் மன எழுச்சி இப்போது. அடுத்த விநாடி என்ன, அதற்கு அடுத்தபடி என்ன நேரிட இருக்கிறது, என்று எண்ணி எண்ணி, பரபரப்படையும் நிலை; இதைத் தான் நான் விரும்புகிறேன்."

"நான் அறிவேனே மன்னா, அதனை! அறிந்துதானே இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். பிரான்சு நாட்டு உயர்தர பிரபு குடும்பத்து வாலிப ரசிகன் உல்லாசப் பயணமாக வந்துள்ளார். தங்கள் மாளிகையில் சில நாட்கள் தங்க விழைகிறார் என்றுதான், செய்தி தந்திருக்கிறேன், கோமகளுக்கு. வேட்டையில் இலேசாகப் பிரியும்- வேடிக்கையாகப் பேசுவதைப் பெரிதும் விரும்புவார்--கீதத்திலே அளவுகடந்த விருப்பம்- நாட்டியமாடுவதிலே நேர்த்தியான முறை தெரிந்தவர்--என்று குறிப்பும் எழுதி இருக்கிறேன். அதோ பாரும், கோட்டை மாளிகை மாடி- தீபாலங்காரம்...."

"வரவேற்கத் தயாராக இருக்கிறாள், வனிதை!"

"உள்ளே ஒரே பரபரப்பாக இருக்கும், பணியாட்கள் ஓடி ஆடி வேலை செய்தவண்ணம் இருப்பர். அதோ, கீதம் கேட்கிறதே, இனிமையான நாதம்......"

கோட்டை மாளிகை வாயல்வந்தடைந்தனர். மாறு வேடமணிந்திருந்த மன்னனும் அமைச்சனும், உள்ளே கீதம் மும்முரமாகக் கேட்டப்படி இருந்தது. காவலாட்கள், தடுத்து நிறுத்தினர். உள்ளே செல்லக் கூடாது என்று. மன்னன் அமைச்சனைப் பார்த்தான்--அமைச்சன், காவலாளைப் பார்த்தான். அவன், "உள்ளே, சீமாட்டி இன்று இருவிருந்தினர்களை, உபசரித்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு யாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/16&oldid=1549005" இலிருந்து மீள்விக்கப்பட்டது