பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


நுழையலாகாது--அனுமதி கிடையாது" என்று கூறி, கதவைத் தாளிட்டுக் கொண்டு சென்றே விட்டான். உள்ளேகீதம்! மன்னன் மனதிலே, கோபம்! அமைச்சருக்கோ திகைப்பு! என் ஏற்பாடு என் ஏற்பாடு!!- என்று முணுமுணுத்துக் கொண்டார். உள்ளேயோ, மானே! தேனே! மாங்குயிலே! என்று காதல் கீதம், சாகசச் சிரிப்பொலி! வந்த வழியே திரும்பிச் சென்றனர், மன்னரும் அமைச்சரும்...

நடைபெற்ற தென்னவெனில், அமைச்சரும், நாடகக் குழுத் தலைவனும் பேசிக் கொண்டிருந்ததை அவர்கள் அறியாமல் கேட்டுக் கொண்டிருந்த வேலை தேடி வந்த நடிகன், வேறோர் எத்தனுடன் கூடிக்கொண்டு, கோட்டைக்கோமகளை ஏய்த்து விட்டான்--அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சீமான் போல நடித்து?

இலக்கியமல்ல, வரலாறும் அல்ல, கட்டிவிடப்பட்ட கதைதான் இது. எனினும் இது போன்றதும் இதனினும் மோசமானதுமான பல செயல்களைச் செய்து வந்தவர், ரிஷ்லு என்று, பல கதைகளைப் பலர் கட்டினர்--மக்கள் இவ்விதமான கதைகளை, உண்மை என்று நம்பியது மட்டுமல்ல, ரிஷ்லு இதுவும் செய்வான், இதைவிடக் கேவலமான காரியமும் செய்வான்--ஆதிக்க வெறிபிடித்தலையும் அந்த ஆண்டி, எதையும் செய்வான், என்றுதான் பேசுவர். மக்கள், அந்த அளவுக்கு, ரிஷ்லுவைப்பற்றி மனக் கொதிப்பு அடைந்திருந்தனர். ஆனால், வெளிப்படையாக எதிர்க்கவோ இயலாது, ரிஷ்லுவின் பழி தீர்த்துக் கொள்ளும் திட்டம் பயங்கரமானது. எதிர்ப்பவர், தப்புவதில்லை-- சித்ரவதையையே பரிசாகப்பெறுவர்.


கார்டினல் ரிஷ்லு, பிரான்சு நாட்டை ஆட்டிப்படைத்த ஆதிக்கக்காரன்--மன்னனே அவனுடைய சதுரங்கக் காயா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/17&oldid=1549006" இலிருந்து மீள்விக்கப்பட்டது