பக்கம்:அரசாண்ட ஆண்டி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94


எனவேதான், புரட்சி கிளம்பிற்று--பிரான்சு, புடம் போட்ட தங்கமாவதற்கு! மக்களுக்காக அரசு! மக்களுக்காக பிரான்சு! என்ற முழக்கமிட்டானர், புரட்சிவீரர்கள்.

அறியாமல் செய்த ஒரு நன்மை உண்டு, ரிஷ்லுவால்!

கோட்டை கொத்தளங்களை அமைத்துக்கொண்டு, கொடிகட்டி ஆண்ட பிரபுக்களின் கொட்டத்தை அடக்கி அவர்களுடைய இராணுவ பலத்தை ஒடுக்கி விட்டான் ரிஷ்லு. மக்கள் பிரான்சிலே மாபெரும் புரட்சி செய்தபோது, அவர்களை எதிர்க்கும் சக்தியை, பிரபுக்கள் பெற முடியாதபடி இது, செய்தது.

எல்லா அதிகாரங்களையும் அரசனிடம் குவித்து வைத்ததும், புரட்சிக்கு மறைமுகமாக உதவி செய்தது.

மன்னனுடைய மணிமுடி ஒளிவிட வேண்டுமென்று, ஏழையின் இரத்தத்தை அபிஷேகம் செய்வித்து அரசாட்சி புரிந்தான் ரிஷ்லு, மக்கள்பதிலளிக்க நெடுங்காலம் பிடித்தது. அவர்கள் தந்த பதிலோ, பயங்கரமானது, மன்னனின் தலையை வெட்டிக்காட்டி, முழக்கமிட்டனர். மக்களுக்காக பிரான்சுக்காக!! என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசாண்ட_ஆண்டி.pdf/94&oldid=1549077" இலிருந்து மீள்விக்கப்பட்டது