பக்கம்:அரசியர் மூவர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 ☐ அரசியர் மூவர்


 அவனுக்கு மிக வேண்டியவர்களும், வேண்டாதவர்களும் ஒன்றாகவே கருதப்படுகின்றார்கள். தசரதன், கோசலை என்பாரிடம் கொண்டிருந்த அன்பு காரணமாகவும் அவன் கடமை பிழைத்துவிடவில்லை. இராவணன் மாட்டுக் கொண்ட பகைமை காரணமாகவும் அவன் கடமை பிறழவில்லை. தசரதன் இறந்துவிடுவான் என்பதை அறிந்திருந்தும், இராமன் காடு சென்றுவிட்டான், இராவணன் தீமையை அறிந்திருந்தும், அங்கதனைத் தூதாக அனுப்பினான்; முதல் நாட்போரில் அவனுக்கு உயிர்ப்பிச்சை நல்கி, மறுநாள் வருமாறு ஏவினான். உண்மை அறத்தை அறிந்து அதனை அவ்வறத்தின்மேற் கொண்ட காதலால் கடைப்பிடிப்பவர்கட்கு ஈடில்லை.

இராமனை அறியாதவர்

இராமனுடைய இந்த ஒப்புயர்வு அற்ற பண்பாட்டை அவனுடைய தாய் தந்தையரே முற்றிலும் அறிந்துகொள்ளவில்லை என்று நினைய வேண்டி உளது. அல்லாவிடில், இறுதி வரை அவனைக் காடு செல்லாமல் மீட்டுவிடத் தசரதன் ஏன் முயல்கிறான்? தன்மேல் பழி வாராமல் வசிட்டன் எவ்வாறேனும் அவனை அழைத்து வர வேண்டும் என்று ஏன் கூறுகிறான்? இவன் ஒரு புறம் இருக்க, பெற்றெடுத்த தாயாகிய கோசலைகூட இராமனை முற்றிலும் அறிந்து கொள்ளவில்லை. அறிவால் சிறந்த கோசலை இதனை அறியவில்லை என்றால், அதற்குக் காரணம் அவளுடைய தாயன்பே தவிர, வேறு ஒன்றும் இருத்தற்கில்லை.

“இவன்இஞ் ஞாலம் இறந்துஇருங் கானிடைத்
தவம்நி லாவகை காப்பன் தகைவுஇலாப்
புவனி நாதன் தொழுது” (1632)

என்று முடிவு செய்துகொண்டு போகிறாள் அத்தாய்.

இந்த முடிவுடன் கோசலை தன் கணவன் இருக்கும் கைகேயி கோயிலுக்குச் செல்கிறாள். கைகேயி அரண்மனைக்குப் புறப்பட்டுச் செல்கையில் கோசலையின் மனத்தில் தசரதனைப் பற்றிய மிகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/110&oldid=1496925" இலிருந்து மீள்விக்கப்பட்டது