பக்கம்:அரசியர் மூவர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல்தேவி கோசலை ☐ 109


 தவறான எண்ணமே நிறைந்திருந்தது. பிறர் சூழ்ச்சிக்கு அவன் பலியாகிவிட்டான் என்பதை அறியாத அந்தப் பேதை, அவனை ஒரு பெரிய சூழ்ச்சிக்காரன் என்றே மதித்துவிட்டாள். "தகைவு இலாப் புவனி நாதன்” என்று அவள் கூறும் பொழுது தசரதனைப் பற்றி அவள் கொண்டிருந்த எண்ணம்புலனாகிறது. இவ்வாறு தசரதனைப் பற்றி அவள் தவறாக நினைக்கத்தக்க காரணமும் உண்டு. சூழ்ச்சியின் அடிப்படை கைகேயியினிடம் தொடங்கிற்று என்று முழுவதும் நம்பி இருந்த அவளை இராமனுடைய சொற்கள் மனமாற்றம் கொள்ளச் செய்தன. ஆனாலும், தசரதன் வேண்டா வெறுப்புடன் வேறு வழி இன்மையாலேதான் இவ்வாறு கூறினான் என்பதைக் கோசலைக்கு அவன் கூறவில்லை அல்லவா? மேலும், இராமனுக்கே அதுபற்றி உறுதியாக ஒன்றுந் தெரியாது. ஆதலாலே தான் கோசலை தசரதனைப் பற்றிய தவறான எண்ணத்துடன் கைகேயியின் அரண்மனை புகுந்தாள். ஆனால், அங்கு அவள் சற்றும் எதிர்பாராத காட்சி கிட்டுகிறது. கணவன் அவசமுற்றுப் பார்மிசை வீழ்ந்து கிடக்கும் நிலையைக் காண்கிறாள். “உயிர் உடைந்த போது உடல் வீழ்ந்ததென்ன" (1634) அவளும் அவன் மேல் வீழ்ந்து அரற்றுகிறாள். அப்பெரும்ாட்டி அரற்றுவதாக அமைந்த நான்கு பாடல்களிலும் அவளைப் பற்றி நாம் மிகுதியாக அறிய முடிகிறது. பன்னெடுநாட்களாகவே தசரதன் கைகேயியிடத்துக் கழி பெருங்காதல் கொண்டு அவளிடமே தங்கிவிட்டாலும், கோசலைக்கு அவன்மாட்டு இருந்த காதல் சற்றுங் குறையவில்லை என்பதை இப் பாடல்கள் அறிவுறுத்துகின்றன. "பிறியார் பிரிவு எது என்னும்" "தமியேன் வலியே என்னும்" (1635) இவ்வாறு புலம்பும் அவள் அன்பின் ஆழத்தை இதோ ஒரு பாடல் தெரிவிக்கிறது.

"'திரையார் கடல்சூழ் உலகின் தவமே திருவின்
திருவே!
நிரையார் கலையின் கடலே! நெறியார் மறையின்
நிலையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/111&oldid=1496928" இலிருந்து மீள்விக்கப்பட்டது