பக்கம்:அரசியர் மூவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவளே தேடிக்கொண்ட துன்பந்தானே இது என்று மட்டும் கூறிவிடுவதால் பயன் இல்லை. தவற்றை இழைத்தவளாயினும், இப்பொழுது நெஞ்சு கலங்கி நிற்கிறாள். தனக்கு முடி வேண்டா என்று மறுக்கும் பரதனைக்கூட அவள் வலியுறுத்தி முடியைப் பெற்றுக் கொள்ளுமாறு துண்டவில்லை. ஏன்? அவள் கதிகலங்கி அறியாமல் நிற்கிறாள் என்பதற்கு அதுவே எடுத்துக்காட்டாகும். மூன்றாம் மனிதனைப்பற்றிக் கூறுவதுபோல, வானகம் எய்தினான்; வருந்தல் நீ என்றுதசரதன் இறந்ததைப்பற்றிக் கூறும்பொழுது கைகேயியின் தன்னை மறந்த நிலையைக் காண்கிறோம்.

தந்தைக்காகப் பெரிதும் வருந்திய பரதன், அடுத்தபடியாகக் கேட்கும் வினா, “அண்ணன் எங்கு உளான்?” என்பதேயாகும். இவ்வாறு வினாவாக அவன் அவளை நோக்கிக் கேட்கக்கூட வில்லை. தானே தனக்குக் கூறிக்கொள்பவன்போல, அண்ணனைப் பார்த்தால் ஒழியச் “சிந்தை வெங்கொடுந்துயர் தீர்கலாது.” என்றான். இவ்வாறு அவன் கூறிக்கொண்ட சொற்களைக் கேட்ட அவள் கூறுகிறாள்.

"அவ்வுரை கேட்டலும் அசளி ஏறுஎன
வெவ்வுரை வல்லவள் மீட்டுங் கூறுவாள்;
"தெவ்வடு சிலையினாய் தேவி தம்பிஎன்று
இவ்விரு வோரொடுங் கானத் தான், என்றாள்.”

கைகேயி கூறிய இவ்வார்த்தைகள் பரதனைப்பெரிதும்மருட்டி விட்டன. இப்பொழுதுதான் அவன், அவளையே ஐயங்கொள்ளத் தொடங்கினான். கிழவனான தந்தை இறந்தான் என்றால் இதில் அவளை ஐயுறக்காரணம்யாதுமில்லை. ஆனால், இராமன் ஏன் காடு செல்ல வேண்டும்? ஒரு வேளை அவன் பெருங்குற்றம் இழைத்து அதற்காக அரச தண்டனையாகக் காட்டுக்கு அனுப்பப் பெற்றானா? "தீயவை இராமனே செய்யும்?” என்று கூறி, "அப்பெருமகன் செய்யு மேல், அவை, தாய் செயல் அல்லவோ தலத்துளோர்கட்கு எலாம்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/51&oldid=1496080" இலிருந்து மீள்விக்கப்பட்டது