பக்கம்:அரசியர் மூவர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாடக மயில் D 63

 கணவனாகிய தசரதன் சொல்லிவிட்டான் என்றால் இதைவிடப் பெரிய சாபம் வேறெதுவும் இருப்பதற்கில்லை. இவ்வளவு பெரிய சாபத்தைப் பெற்றுக்கொண்டு, பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டுமென்று கைகேயி நினைத்தாள் என்று நினைப்பது அவளுடைய அறிவுக்கும், பண்புக்கும் பொருத்தமில்லாததாகப் படுகின்றது.

ஆகவே, வேறு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காரணத்தைக் தன் அடி மனத்தில் வைத்துக்கொண்டு, அதனை வெளியில் சொல்ல முடியாத நிலையில், தன்னுடைய கணவனாகிய தசரதனைப் பெருங் குற்றத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைக்கின்றாள் கைகேயி என்று நிலைப்பது பொருத்தமுடையதோ என்று தோன்றுகிறது.

இராமனது அவதார நோக்கத்தை அவள் அறிந்திருந்தாள் என்று சொல்வதற்கில்லை. 'இராகவன் காட்டிற்கு செல்வதுதான் அவன் பிறந்ததனுடைய நோக்கம்', என்பதைக் கைகேயி அறிந் திருந்தாள் என்று சொல்வது கதைப் போக்கில் இடையூறு விளை விக்கும். ஆகவே, அந்தக் கருத்தை விட்டு விடலாம்.

அவளைப் பொறுத்தமட்டில் தசரதன் தன்னுடைய திருமணத் திற்கு முன்னால் கொடுத்த வாக்கை மீறி (கன்யா கல்கம்) இப் பொழுது அதற்கு மாறுபட்ட ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குகிறான். இதனைச் செய்து முடிப்பானேயானால் உலகமுள்ளளவும் தசரதனுடைய பெயர் பழிக்கு உள்ளாகும். அது மட்டுமல்ல, பெரும் பாவத்திற்கும் அவன் ஆளாவான். பரம்பொருளை மகனாகப் பெற்றுங்கூட இத்தகைய குற்றத்திலிருந்து அவன் விடுபட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கும்.

ஆகவே, இப்பொழுது ஒன்று, தசரதனை அவனுடைய வழிப் படி விட்டு அதனால் வருகின்ற பெருங் குற்றத்தினையும், பழி பாவங் களையும் அவனே ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். இல்லை யானால் அவன் செய்ய முனைந்த காரியத்தைச் செய்ய விடாமல் த்டுத்து அதனால் வருகின்றபழிபாவங்கள், குற்றங்கள்,கெட்டபெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/65&oldid=1496517" இலிருந்து மீள்விக்கப்பட்டது