பக்கம்:அரசியர் மூவர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1.சூழ்ந்த தீ வினை

படைப்பு இரு வகை

ம்ப நாடன் காப்பியமாகிய அரிய பூங்காவில் அனைத்து வகையான பூக்களையும் காணலாம். அவற்றுள், மணத்தால் சிறந்தவை சில; நிறத்தால் சிறந்தவை சில; இனிய தேனுடைமையாற் சிறந்தவை சில; மருந்தாகி நிற்பதாற் சிறந்தவை சில; பெரிய வடிவு பெற்றமையாற் சிறந்தவை சில; சிறிய வடிவு பெற்றும் சிறந்தவை சில.

இத்தொகுப்பினுள் அடங்காமல் உள்ள மலர்களும் சில உள. அவை விடத்தன்மை நிரம்பியவை; கண்டாலும் தீமை பயக்கும் இயல்பு வாய்ந்தவை. என்றலும் என்ன? ஏனையவகைகளிற் சிறந்து விளங்கும் பூங்காவில் இருப்பதாலும், ஏனைய மலர்களின் நன்மையையும் மணத்தையும் எடுத்துக் காட்ட ஏதுவாய் இருப்பதாலும் இவையும் சிறந்து விளங்குகின்றன எனலாம்.

உயர்வும் தாழ்வும் உடைய இம்மலர்கள் அனைத்தும் அக் கவிஞனுடைய படைப்புகளே என்பதைக் கண்ட பிறகு ஒரு பாத்திரத்திடத்து விருப்பும், மற்றொரு பாத்திரத்திடத்து வெறுப்பும் காட்டுதல் அறிவுடைமையாகாது. இராமனும் சீதையும் கம்பனுடைய படைப்புகள்; அப்படியே இராவணனும் கூனியும் அவனுடையவர்களே. இப்பாத்திரங்களைப் பற்றி நாம் காணும்பொழுது கவிஞனின் ஆற்றலைத்தான் காண வேண்டும்.

கவிஞன் படைப்பின் சிறப்பு

மனித மனம் ஆழங்காண முடியாத அளவு விரிந்தும், ஆழ்ந்தும் இருக்கிறது; மேலும், அதில் சுழியிட்டுத் தோன்றும் சுழற்சிகளுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரசியர்_மூவர்.pdf/7&oldid=1495434" இலிருந்து மீள்விக்கப்பட்டது