கலைஞரின் சட்டமன்ற உரைகள்
103
"கலவரம் குழப்பம் இருந்தால் முன்னேற முடியாது. நாங்கள் இங்கே சாசுவதமாக இருப்போம் என்று கருதவில்லை.
நாங்கள் அந்தப் பக்கம் வந்து உட்காருவோம் என்று கனம் அண்ணாத்துரை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். யாரும் நிர்வாகம் நடத்தலாம். யார் நிர்வாகம் நடத்தினாலும் அமைதி, ஒழுங்கு என்ற அடிப்படையில்தான் நடத்த முடியுமே தவிர கலவரம், குழப்பம் என்ற அடிப்படையில் நடத்த முடியாது. கலவரங்களை அடக்க இப்போது இருக்கிற சூழ்நிலையில் போலீஸ் படையை அனுப்புவது என்கிற அந்த முறைகள் எங்களுக்குத் தெரியும். மக்களுடைய உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது போல், போலீஸ்காரர்களுடைய உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்.
"எந்த' சுடக்கூடிய சம்பவமாக இருந்தாலும் உடனே நீதிபதியைப் போட்டு அந்தப் போலீஸ்காரர்களை குற்றவாளி களைப் போல் கூண்டில் ஏற்றி விசாரிப்பது என்றால் இந்த வேலையைப் பார்ப்பதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். இதற்கு இந்தப் போலீஸ் படையையே கலைத்து விடலாம்” என்று பேசியிருக்கிறார்கள். 30 நாட்கள், ஒருநாள் அல்ல, இரண்டு நாட்கள் அல்ல, 1957-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 10-ஆம் நாள் முதல் 30-ஆம் நாள் வரை 20 நாட்கள் முதுகளத்தூரில் நடந்த அந்தக் கோர விளையாட்டுக்கு வெறித்தனம் மிகுந்த விளையாட்டுக்கு நீதி விசாரணை வேண்டுமென்று கேட்ட பொழுது திரு.சுப்பிரமணியம் அவர்கள், எந்தச் சுடக்கூடிய சம்பவமாக இருந்தாலும் நீதிபதி போட்டு போலீஸ்காரர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி விசாரிப்பது என்றால், போலீஸ் வேலையைப் பார்பதற்கே யாரும் வரமாட்டார்கள் என்று கூறிய அவர். “இவ்வளவு கலவரம் ஆகும்போது, கலவரத்தை அடக்க முயலுகிற நேரத்தில் நாம் இவர்கள் செய்யவேண்டியதை எல்லாச் சூழ்நிலை காரணமாக வரம்புக்கு மீறி நடக்காமல் இருக்க வேண்டி, உறுதியான உத்திரவுகளைப் போட்டிருக்கிறோம்.
ஆக இன்றைக்கு நீதிபதி விசாரணை தேவையில்லை என்று சொன்னது ஏதோ அவர்கள் அக்ரமம் செய்து விட்டார்கள்,