104
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
அதை மறைக்க வேண்டுமென்றல்ல" என்று கூறி திரு. சி. திரு.சி. சுப்பிரமணியம் அவர்கள் நீதிவிசாரணைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்கள்
அண்ணா அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டார்கள், "ஒன்றைப் பற்றி எழுதினால், ஒன்றைப்பற்றி பேசினால் அதன் விளைவாக அந்தப் பகுதியில் மீண்டும் ஒரு அமளி ஏற்படுமானால், சீக்கிரத்திலே உணர்ச்சிவசப்படக்கூடிய மக்கள் கொதித்தெழுவார்களானால், அதற்கு நாமே பொறுப்பாளியாக வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நிலைமையை உண்டாக்கி அவர்களுக்கும் ராஜ்யத்திற்கும் தீங்கை உண்டு பண்ணாமல் அமைதியாக-புண்ணை ஆற்ற நியாயமான முறையில் மருந்து போடவேண்டும் என்கிற தன்மையில் பேசாமலிருந்தேன். இப்போதும்கூட இந்தத் தீர்மானத்தின் மீது பேச எனக்கு விருப்பம் இல்லைதான்” என்று ஆரம்பித்தார் அண்ணா. காம ராசரும் பக்தவச்சலமும்தான் கலவரங்களுக்குப் பொறுப்பாளி- தூண்டிவிட்டவர்கள் என்று சட்டசபையில் பேசப்பட்ட போது- இறுதியாக அங்கே அண்ணா என்ன பேசினார் தெரியுமா?
"இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்ததின் நோக்கம் முதலமைச்சர் அவர்களின் பேரிலும் போலீஸ் அமைச் சரின் பேரிலும் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருவதற்கு மாத்திரம்தான் என்று நமது நிதியமைச்சர் அவர்கள் கூறினார்கள்.
நாங்கள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்திருக் கின்ற இந்த நேரத்திலே பேசுகின்றபொழுது என்ன கூறினோம் என்பது நினைவிலே இருக்கின்றது.
இந்தப் பிரச்சினைக்கு இரண்டு மந்திரிகள் பொறுப் பாளிகள் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் ஒப்பவில்லை." என்று அண்ணா கூறினார்கள்.
அவர்கள்
அந்தப் பெருந்தன்மை வாய்ந்தவர் உட்கார்ந்திருந்த இடத்தில் நம்முடைய கருத்திருமன் அவர்கள் உட்கார்ந்து கொண்டு, போலீஸ் தலையீடு இல்லாத, போலீஸ் யாரையும் சுட்டுப் பொசுக்காத, போலீஸ் கொன்று குவிக்காத ஒரு