கலைஞரின் சட்டமன்ற உரைகள்
113
ஏனென்றால், குறைகளை வெளியிடங்களில், பொதுக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லுகிற நேரத்தில், அந்த இடத்திலே வந்து மறுத்துரைப்பதற்கு, நேரடியாக விளக்கங்கள் அளிப்பதற்கு எங்களால் இயலாத நிலையில் என்னென்ன குற்றங்களோ சாட்டப் பட்டு விடலாம். ஆனால் அவைகள் எல்லாம் நேருக்கு நேர் விவாதிக்கப்படுகின்ற நேரத்தில் நாங்கள் நேரடியாக விளக்கங்களை அளிப்பதாலே தமிழ் நாட்டில் இருக்கும் நான்கு கோடி மக்களும் உண்மைகளை உணருவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்ற காரணத்தால்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒருவகையிலே எங்களுக்குச் சாதகமான முறையில் பயன்படுகிறது என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கின்ற கட்சியினர், எங்களை, இந்த அரசை அல்லது இந்த அரசினுடைய அதிகாரத்தின்கீழ் இயங்குகின்ற காவல்துறையின் போக்கைக் கண்டித்து பலத்த விவாதங்களை இங்கே நடத்தியிருக்கிறார்கள். அவர்கள், இந்த அரசு காவல்துறையைப் பொறுத்தவரையிலே மேலும் நல்ல திருத்தங்களைச் செய்து, இப்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஏற்பட்டு விடுகின்ற சில அசம்பாவிதங் களைக் கூடத் தடுத்து, நல்ல முறையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, இடதுசாரி எண்ணமுடைய ஆட்சி வலுப்பெற வேண்டுமென்ற நல்ல எண்ணத்தின் காரணமாகத்தான் இடதுசாரி கம்யூனிஸ்டு கட்சி, வலதுசாரி கம்யூனிஸ்டு கட்சி, பி.எஸ்.பி., எஸ். எஸ். பி., ஆகிய கட்சிகளின் சார்பில் இன்று கண்டனத் தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக நான் அறிகிறேன். ஆகவே, நான் அதனையும் மறுத்து, அல்லது வன்மையாகக் கண்டித்துப் பேச முற்பட எண்ணிடவில்லை.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், மாண்புமிகு புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. பூவராகன் அவர்கள் குறிப்பிட்டதுபோல், கொள்கைகளைச் சொல்லித் தாக்கினார்களா, நடைமுறைத் திட்டங்கள், நாங்கள் வகுத்திருக்கிற வேலை முறைத் திட்டங்கள் இவைகளில் இருக்கும் தவறுகளைச் சொல்லித் தாக்கி னார்களா என்றெல்லாம் பார்த்தால் இல்லை. குறிப்பாக, அமைச்சர்கள் அல்லது அளிக்கப்பட்ட அலுவல்கள் அல்லது
5-க.ச.உ.(அ.தீ.) பா-2