114
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
கார் பரிசளிப்பு விழாக்கள் என்ற இந்த வகையிலேதான் எதிர்க் கட்சியில் இருந்து பெரும்பாலான தாக்குதல்கள் இந்த நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தின் அடிப்படையிலே இடம்பெற்றன என்பதனை இந்த மன்றத்திலுள்ள நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.
அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்ட நேரத்தில் எல்லாம் அந்தந்தப் பொறுப்புக்குரிய அமைச்சர்கள் எழுந்து தக்க விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். அந்த விளக்கங்கள் அத்தனையும் பத்திரிகா தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டுமென்ற போக்குக் கொண்ட எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன. 'பத்திரிகா தர்மத்தைப் பற்றிக் கவலை இல்லை, எப்படியாவது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இழுக்கை உண்டாக்க வேண்டும், இவர்கள் ஆளுவதா? இவர்கள் யார்? சாதாரணமானவர்கள், சாமானியமானவர்கள், ஆளுவதற்குத் தகுதிபடைத்த அந்தஸ்த்துள்ள குடும்பங்களில் பிறக்காதவர்கள்; பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ளவர்கள் ஆண்டாண்டு காலம் அடிமைப்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள்; இன்று ஆளும் கட்டிலை அலங்கரிப்பதா? என்று ஆத்திரம் கொண்ட சில ஏடுகள் வேண்டுமானால் நாங்கள் அவ்வப்போது அளித்த விளக்கங்களை எல்லாம் வெளியிடாமல் மறைத்திருக்கலாம். அவர்களையும் நான் தாக்கிட விரும்பவில்லை. எங்களை ஆளாக்கிய அண்ணன் கற்றுத் தந்த மொழியின்படி 'வாழ்க அவர்கள்' என்று வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நானோ அல்லது அமைச்சர்களோகூட பதில் சொல்லத் தேவையில்லை என்ற அளவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரிய பல உண்மைகளை வெளியிட்டு, அழுத்தந்திருத்தமான பதில்களை அளித்திருக்கிறார்கள். அந்த வகையில் மிகத் திறமையோடு வாதாடிய ஆளும் கட்சி உறுப்பினர்களையெல்லாம் நான் சட்டசபையில் உள்ள ஆளும் கட்சியின் தலைவன் என்ற முறையில் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அதே நேரத்தில் மிகுந்த கண்ணியத்தோடும், இந்த அவையின் மரபு கெடாத