உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

127

ஏதோ தமிழ் நாட்டில் விதிவிலக்குகளையெல்லாம் ரத்து செய்யவில்லை. தமிழ் நாட்டில் நிலப்பிரபுக்களினுடைய பக்கத்தில் தி.மு.க. அரசு ஓடிக்கொண்டிருக்கிறது. விதிவிலக்குகள் ரத்து செய்யப்படவேண்டும் என்று சாதாரண பாமர மக்களிடையே நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உண்மை என்ன? கேரளத்தில் இடதுசாரி கம்யூனிஸ்டு ஆண்ட நேரத்திலும் கேட்கிறேன், வலதுசாரி கம்யூனிஸ்டுகள் ஆண்ட நேரத்திலும் கேட்கிறேன், அங்கே உள்ள நிலைமை என்ன? அங்கே விதிவிலக்கு நிலங்களுக்கு உண்டு. கோவில்கள், மடங்கள், மசூதிகள் இவைகளின் நிலங்களுக்கு உச்சவரம்புச் சட்டத்தில் அங்கே விதிவிலக்கு உண்டு. தனிப்பட்டவர்களுடைய காடுகளுக்கு விதிவிலக்கு உண்டு. ஆலைகளின் நிலங்களுக்கு விதிவிலக்கு உண்டு. மலைத் தோட்டங்களுக்கு விதிவிலக்கு உண்டு. பொது டிரஸ்டுகளுக்கு அங்கே விதிவிலக்கு உண்டு இங்கே மாத்திரம் ஆனால், நாங்கள் விதிவிலக்கு இருப்பதை எதிர்த்துத்தான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம், நடத்துகிறோம் என்று கூறுவது முறையல்ல என்பதை நான் இந்தக் கிளர்ச்சி இப்பொழுது முடிவுற்றுவிட்டாலும்கூட ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

ஒவ்வொரு கிளர்ச்சியின்போதும் நடைபெற்றிருக்கிற போலீஸ் நடவடிக்கை மீது இந்த அரசு உரிய நடவடிக்கை 3, 31/2 ஆண்டு காலமாக எடுத்திருக்கிறதா, இல்லையா என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். கீழ்வெண்மணி சம்பவம் கொடுமையான சம்பவம். அந்தச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் இரண்டு நாட்களுக்கு உணவுகூட அருந்தாமல், உறங்காமல் அவர்கள் இருந்த காட்சியை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம். அவர்களோடு பேசிய மதிப்பிற்குரிய திரு. ராமமூர்த்தி, எம். பி. அவர்கள் அண்ணா அவர்களுக்கு ஆறுதல் கூறுகிற அளவுக்கு அன்று அவர்கள் சோர்ந்து கிடந்ததை யாரும் மறந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட கீழ்வெண்மணி சம்பவத்திற்கு தி. மு. க. ஆட்சி காரணம் என்று கூடச் சொல்கிறார்கள். அதற்காகக் காங்கிரஸ் சார்பிலே கண்டனத் தீர்மானம் கொண்டுவந்த நேரத்தில் திரு. சங்கரய்யா அவர்கள் அந்தக் கண்டனத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது,