உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

காங்கிரஸ் அதைக் கொண்டுவந்திருப்பது அரசியல் லாபத்திற்கே தவிர, வேறு அல்ல, கண்டனத் தீர்மானத்தை நாங்கள் திர்க்கிறோம் என்று திரு. சங்கரய்யா அவர்கள் கூறியது எனக்குப் பசுமையாக ஞாபகத்தில் இருக்கிறது. அதை அன்றைக்குக்கூட அவர்கள் நினைவுபடுத்தினார்கள்

ஆகவே, அரசியல் லாபத்திற்கு வெண்மணி சம்பவத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது. அது எதிர்பாராத வகையில் ஏற்பட்டுவிட்ட ஒரு சம்பவம். அந்தச் சம்பவத்தை ஒட்டி தஞ்சை மாவட்டத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற அடிப்படையில் அங்கே கணபதியாப் பிள்ளை கமிஷன் நியமிக்கப்பட்டது. கீழ்வெண்மணியில் நடைபெற்றது முடிந்த காரியம் என்று நாங்கள் சும்மா இருந்துவிடவில்லை. உடனடியாக, பிரச்சினையைக் கவனித்து, ஆராய்ந்து தஞ்சைத் தரணியில் அமைதி நிலவ என்ன வழிவகைகளைக் காணலாம் என்பதற்காக கணபதியா பிள்ளை கமிஷன் நியமிக்கப்பட்டது. அந்தக் கமிஷன் தந்த பரிந்துரையின்படி நியாயக் கூலி நிர்ணயிக்கப்பட்டு, இன்றைக்கு தஞ்சை மாவட்டத்தில் ஒரு அமைதியான சூழ்நிலை உருவாகி இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

துப்பாக்கிப் பிரயோகம் எதுவாக இருந்தாலும், அதில் நீதி விசாரணை வைக்க இந்த அரசு தயங்கியது இல்லை என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உண்டு. அரவங்காடு துப்பாக்கிப் பிரயோகம் குறித்து நீதி விசாரணை வைக்கப்பட்டு, மாவட்ட நீதிபதி திரு. கணேசன் அவர்கள் அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு, அவரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் மாணவர்கள் பஸ் தொழிலாளர்கள் மோதல் ஏற்பட்டபொழுது, ஜஸ்டிஸ் சோமசுந்தரம் அவர்களால் நீதி விசாரணை வைக்கப்பட்டு, அவர்கள் செய்துள்ள பரிந்துரைகளின் படி ஆயிரக்கணக்கான ரூபாய் மாணவர்களுக்கு நஷ்டஈடாகத் தரப்பட்டிருக்கிறது. அந்தப் பரிந்துரையை இந்த அரசு மறுத்து விடவில்லை. ஏற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அத்தனை பேர்களுக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடாக அரசு கொடுத்திருக்கிறது.