கலைஞரின் சட்டமன்ற உரைகள்
133
விடுவிக்கப்பட்டனர். இறந்தவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் அரிஜன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இறந்தவர் குற்றம் செய்வதையே வழக்கமாகக்கொண்ட ஒரு பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, இதற்கு முன் 16 முறை தண்டிக்கப்பட்டவர். சாதி இந்துக்கள் வசிக்கும் இடத்தில் வீடு வாங்கியதன் காரணமாக ஆமத்தூரில் எந்த அரிஜனனும் கொலை செய்யப்படவில்லை என இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
மேலும் உண்மையான தகவல்கள் இருக்குமானால், எதிர்க்கட்சித் தலைவர் தேடிக் கொடுத்தால், அதுபற்றி விசாரித்து, நிச்சயமாக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறேன்.
அடுத்து,
ன்னொன்று, முதலில் சிறிய குற்றச்சாட்டுகளைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். பெரிய குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் வருகிறேன். சில்லறைக் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்லிவிடுகிறேன்.
கார்களைப் பற்றிச் சொன்னார்கள், எம்.எல்.ஏ.-க்கள் பரிசு அளிப்பு விழாக்கள் நடத்துகிறார்கள் என்றெல்லாம் சொல்லப் பட்டது. எம்.எல்.ஏ., எம்.எல்.சி.-களுக்கு இந்தக் கார்கள் பொறுத்தவரையில், சர்க்காருடைய 'அலாட்மெண்ட்' 1967-லிருந்து, 1970 வரையில் சுமார் 159 கார்கள் தரப்பட்டிருக்கின்றன. இவற்றில் முன்னேற்றக் கழகத்தினருக்கு சுமார் 100 கார்களும், காங்கிரஸ் காரர்களுக்கு 28 கார்களும், சுதந்தராக் கட்சிக்காரர்களுக்கு 7 கார்களும், பிரஜா சோஷலிஸ்ட் கட்சிக்கு 5 கார்களும், இடது 5 கம்யூனிஸ்டுகளுக்கு 3 கார்களும், தமிழ் அரசுக் கழகத்திற்கு 2 கார்களும், குடியரசுக் கட்சி, கே.பி.எஸ். மணிக்கு ஒரு காரும், வலது கம்யூனிஸ்ட் கட்சி, ஏ. கே. சுப்பையாவிற்கு ஒரு காரும், சுயேச்சைகளுக்கு 5 கார்களும் அலாட் செய்யப்பட்டிருக்கின்றன.
திரு. வி. கே. கோதண்டராமன் : எங்கள் கட்சியில் யாரும் கார் வாங்கவில்லை.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் சொன்னது ‘அலாட்மெண்ட்' தான். இனிமேல் வேண்டுமானால் வாங்காமல் இருங்கள். அதுவேறு.