உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

திரு. வி. கே. கோதண்டராமன் : நீங்கள் சொன்னது வாங்கியிருப்பது, வாங்கியிருப்பது என்று.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இல்லை, அலாட்மெண்ட் எப்படி போடப்பட்டது என்று சொன்னேன். நாங்களேவா வலுவிலே போட்டோம். நீங்கள் கேட்டுத்தானே அலாட்மெண்ட் போடப்படும். கேட்காமல் போடமுடியுமா? கேட்கப்படுகிறது, அதற்கு அலாட்மெண்ட் போடப்படுகிறது.

இன்னொரு குற்றச்சாட்டு எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார்கள் அனுமதி பெறாமலே விற்றுவிடுகிறார்கள் என்று. 15 எம்.எல்.ஏ.-க்கள் மறுபடியும் விற்பதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி வினாயகம்கூட விற்பதற்கு அனுமதி. . .

திரு. கே. வினாயகம் : நான் விற்கமாட்டேன் என்று இன்னும் வைத்திருக்கிறேன். வெளியே போய்ப் பாருங்கள் இருக்கிறது. (சிரிப்பு.)

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அனுமதி கேட்டிருக்கிறார், ஆகவே அனுமதியில்லாமல் விற்றுவிடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டதால், வினாயகம்கூட அனுமதி கேட்டிருக்கிறார் என்று உங்களைக் காப்பாற்றும் அளவில் சொல்கிறேனே அல்லாமல் வேறில்லை.

திரு. கே. வினாயகம் : அன்பளிப்பு பற்றித்தான் இப்பொழுது கேள்வி.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பொதுமக்கள் கொடுத்த பணத்தில் கார்கள் வாங்குகிறார்கள். திருவெறும்பூர் சுவாமிநாதனுக்குக்கூட ஒரு கார் பொதுமக்கள் கொடுத்து, காமராஜ் அவர்களால் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களாக வாங்க முடியாதவர்கள், ஏதோ பெரும் பணக்காரர்கள், எம்.எல்.ஏ.-வாக இருக்கிறீர்கள். சொந்தப் பணத்தில் வாங்குகிறீர்கள். எங்கள் தரப்பில் இருக்கிறவர்கள் ஏழை, எளியவர்கள்; ஆகவே, பொதுமக்கள் பணம் வசூலித்துக்கொடுத்து கார் வாங்குகிறார்கள்.

பிறகு அதிகாரிகள் நீண்ட நாளாக ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்றார்கள்.