கலைஞரின் சட்டமன்ற உரைகள்
137
சொன்னார்கள். அது பலருடைய மூக்கைப் பொறுத்த விஷயம். (சிரிப்பு). கூவத்திலுள்ள பழைய நாற்றம் அப்படியே இருக்க வேண்டுமென்று யாராவது சொல்வார்களா? கூவம் நதியை சீர்திருத்தம் செய்ய வேண்டுமா, வேண்டாமா? கூவம் நதியிலே ஆண்டாண்டுக் காலமாக குடியிருந்த கொசுக்கள்தாம் இந்தச் சீர்திருத்தத்தை வேண்டாமென்று சொல்லும். அடுத்தபடியாக 'கூவம் நதித் திட்டத்திலே ஊழல். வீராணம் திட்டத்திலே ஊழல், எங்கும் ஊழல், எதிலும் ஊழல், ஃபைல்களைக் கொண்டு வா', என்றெல்லாம் பேசினார்கள். கூவம் நதித் திட்டத்தைப்பற்றி வந்திருக்கின்ற குற்றச்சாட்டுக்களை பத்திரிகைகளில் மிகப் பயங்கரமாக எழுதுகிறார்கள். டாக்டர் ஹாண்டே அவர்கள்கூட அதைப் பார்த்துவிட்டுத்தான் இப்படிப் பேசியிருக்கிறார் என்று கருதுகிறேன்.
'மிகப் பயங்கரமான ஊழல் நாற்றமெடுக்கும் கூவம் சீரமைப்புத் திட்டத்தைக் கைவிட்டுவிட திராவிட முன்னேற்றக் கழக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு முன் உதாரணமாக வரும் ஜனவரி வரையில் கூவம் வேலையைக் கைவிட்டுவிட அரசு உத்தரவு அனுப்பியுள்ளது. 1 கோடியே 36 லட்சம் ரூபாய்க்குத் திட்டம் என்று கூறி, பின் 2 கோடி ரூபாய் வரையில் நீளும் என்ற நிலையிலுள்ள சென்னை- கூவம் சீரமைப்புத் திட்டம் என்பது ஒரு மாபெரும் ஊழல் களஞ்சியமாகும்', என்று ஒரு பத்திரிகை எழுதியதை வைத்து டாக்டர் ஹாண்டே பேசுவது முறையல்ல, கூவம் சீரமைப்புத் திட்டத்தைக் கைவிட்டுவிட அரசு முடிவு எடுத்துள்ளதாகச் சொல்வது உண்மையல்ல.
எடுத்துக்கொண்ட வேலைகள் தீட்டிய திட்டப் பிரகாரம் செவ்வனே நல்ல கண்காணிப்புடன் நடந்துகொண்டிருக்கின்றன. வரும் ஜனவரி வரையில் கூவம் வேலையைக் கைவிட அரசு உத்தரவு அனுப்பியுள்ளது என்று சொல்வது சரியல்ல. திட்டத்தின் மதிப்பீடு 1 கோடியே 10 இலட்சம் ரூபாய், இது 2 கோடி ரூபாய் வரையில் நீளும் என்று சொல்வதும் உண்மையல்ல, இப்பொழுது கூட 500, 600 வேலையாட்கள் மும்முரமாக கூவம் ஆற்றில் வேலை செய்துகொண்டிருக்கின்றார்கள். மழை பெய்ததன்