உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

இடங்களில்

காரணமாக இரண்டொரு கரைகளில் போடப்பட்டிருந்த ஸ்லாப்கள் விழுந்துவிட்டன. இரண்டொரு இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டன. இதற்கு 2 கோடி ரூபாய், 3 கோடி ரூபாய் வரையில் செலவாகியிருக்கிறது என்று தவறான பிரசாரம் செய்கிறார்கள். நாம் போட்ட திட்டம் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய். நாம் இதுவரைக்கும் செலவு செய்தது 81 லட்சம்தான். கூவம் ஊழல், கூவம் ஊழல் என்று சொன்னது அவர்களுடைய அரசியல் பேச்சுக்கு உதாரணமாக இருக்கும் என்பதைத்தவிர வேறென்ன சொல்வது?

கூவம் திட்டத்தினைப் பற்றி இப்படிப் பேசுகிறார்களே, உங்களுடைய ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வீடூர் நீர்த் தேக்கத் திட்டம் என்னவாயிற்று? 1959-ம் ஆண்டு 89 இலட்சம் ரூபாய் செலவில் இந்தத் தேக்கம் கட்டப்பட்டது. 1966-ம் ஆண்டு பெய்த மழையில் அது உடைந்து, மேற்கொண்டு 22 இலட்சம் ரூபாய் செலவிட்டு புதுப்பிக்கப்பட்டது. அது உடைந்ததால் 20 ஏக்கர், 30 ஏக்கர் வரையிலும் மணல் மேடிட்டுப்போன காரணத்தினால் அந்த நிலங்களின் சொந்தக்காரர்களுக்கெல்லாம், இந்தப் புதிய அரசு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நஷ்ட ஈடாக கொடுத்திருக்கிறது. அதைப்போல, கூவத்தில் எங்கேயோ மழையினால் இரண்டு காங்கிரீட் ஸ்லாப்ஸ் சரிந்துவிட்டதற்கு, கூவம் நாற்றம் அடிக்கிறது என்கிறார்கள். நாம் சில திட்டங்கள் போடுகிறோம். சில நேரங்களில் தவறுகள் ஏற்படுகின்றன. அதற்காக திட்டமே ஊழல், ஊழல் என்று பேசுவது முறையல்ல. வீடூர் நீர்த் தேக்கத் திட்டம் ஐந்தாறு ஆண்டுகளுக்குக்கூட நீடிக்காமல் போய் இருக்கிறது.

திரு. க. இராமமூர்த்தி : தலைவர் அவர்களே, வீடூர் நீர்த் தேக்கம் உடைந்தது, திட்டத்தில் ஏற்பட்ட குறையின் காரணமாக அல்ல, அதை சூபர்வைஸ் செய்த என்ஜினியர் செய்த தவறின் காரணமாகத்தான் என்பதைச் சொல்லிக்கொள்கிறேன். (ஆளும் கட்சித் தரப்பில் சிரிப்பு.)

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அடுத்த படியாக, வீராணம் திட்டத்தைப்பற்றி திரு. கே. வினாயகம் அவர்கள் காரசாரமாகப் பேசினார்கள். அதற்கு மாண்புமிகு